அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - கும்பம்

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - கும்பம்

திடமான நம்பிக்கையும், வலிமையான செயலையும் செய்யும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு  ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்ந்து குரு பார்வை பெறுவது பொருளாதாரத்தில் ஓரளவு நன்மையை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீர்வாகும். பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெறுவது எடுத்த காரியம் கைகூடும். பொறுப்புகளை சிலர் ஏற்று நடத்த வேண்டிவரும். சுயதொழிலில் மேன்மை அடைவீர்கள்.
 
ராசியில் ராகு அமர்வது எதையும் எதார்த்தமாக எண்ணாமல் மிகைபடுத்தி பார்ப்பீர்கள். வரவுக்குள் செலவு செய்யாமல் செலவுகளை அதிகபடுத்திக் கொள்வீர்கள். தனஸ்தானத்தில் சனி அமர்ந்து வக்கிரகதி அடைவதும் சில நேரம் காரிய தடைகள் உண்டாகும். சுகஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெறுவது தாயார் உடல்நலன் நன்றாக இருக்கும். தாய்வழி சொந்தங்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவ வசதிகளை பெற்று நலம் பெறுவீர்கள். 
 
ஆறாமிடத்து செவ்வாய் நீசம் பெற்று விரையஸ்தானத்தை பார்வை இடுவது நிலம் சார்ந்த காரியம் சிறப்பாக அமையும். தண்ணீர் பற்றாகுறை, நீங்கி விவசாயம் சிறப்பாக நடக்கும். தனஸ்தானத்திற்கு அதிபதி குரு ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவதால் பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.
 
ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் கேது அமர்வது கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். தொழில் செய்து வருபவருக்கு கடன் வசதியை பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் வருமானம் கிடைக்கும். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். ஏழாமிட சூரியன் எட்டாமிடத்தில் அமர்வது உத்தியோகம் சிலருக்கு கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையிடம் சிலர் பகைமை கொள்வார்கள். தந்தை மகனுக்கு கருத்து வேறுபாடு வரும். 
 
பொது வாழ்வில் இருப்பவருக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அரசியல் பிரவேசம் உங்களுக்கு புதிய அனுபவம் பெற்று தரும். கலைத்துறையினருக்கு முக கவர்ச்சியும் தோற்ற பொலிவும் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் இணைவு பெறுவது மனவலிமையும், துணிச்சலும் கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் பேச்சிலேயே அனைத்தையும் கவர்ந்து விடுவீர்கள். பொறுப்புகளை தட்டி கழிக்காமல் செயல்பட்டு சிறப்பான முன்னேறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், வெண்மை, பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, புதன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
09-10-2026 வெள்ளி அதிகாலை 04.22 முதல் 11-10-2026 ஞாயிறு பகல் 11.06 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் (04.30 - 06.00 மணி) பைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து வித வேண்டுதலும் விரைவில் நிறைவேறும்.