நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - மேஷம்
விருப்பமானவற்றை விரைவில் செய்து முடிக்கும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் நீசம் பெற்று அமர்வதும் தனஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியை பார்வை இடுவதும் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். சிலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகும். இதுவரையில் இருந்த குழப்பம் தீரும். குரு பார்வை ராசிக்கு கிடைப்பது நல்ல முன்னேற்றத்தை தரும். சனியின் தாக்கம் குறையும்.
உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலில் சில மாற்றங்களை செய்ய வேண்டிவரும். நடந்து செல்லும் பாதை கரடுமுரடான சூழ்நிலை வந்தாலும் அதனை எளிதில் சரி செய்து கொள்வீர்கள். சுயமுயற்சியால் நடக்காத சில காரியத்தில் முன்னேற்றமும் செயலில் வெற்றியும் காண்பீர்கள். சிலருக்கு புதிய கடன்படும் நிலை உண்டாகும். இளைய சசோதரியிடம் வாக்குவாதம் உண்டாகும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல ராசியை குரு பார்வை இடுவது செல்வாக்கு பெருகும்.
உங்களின் எண்ணம் நிறைவேறும் காலமாக அமையும். சிலருக்கு நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குரு கேது இணைவு பெறுவது நல்ல யோகம் என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்வது சில தடைகளையும். தடங்கலையும் உண்டாக்கும்.
தொழில் செய்யுமிடத்தில் சிறு தவறுகளுக்காக மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக வேண்டிவரும் சற்று கவனம் தேவை உண்மையை சொல்ல கூட சில நேரம் தயக்கம் காட்டுவீர்கள். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்களின் ராசியை பார்வை இடுவது நல்ல சூழ்நிலையாக அமையும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உங்களின் நீண்ட நாள் காதல் கனவு மனதிலிருந்து வெளி கொண்டு வரும் வாய்ப்பு அமையும். புதிய கடன் வாங்கி, பழைய கடனை அடைக்கும். சந்தர்ப்பம் அமையும்.
லாப ஸ்தானத்தில் ராகு அமர்வதும் ராசிக்கு குரு பார்வை இடுவதும் விபரித ராஜயோகத்தை பெறும் சந்தர்ப்பம் அமையும். ஏழரை சனியின் பாதிப்பு குரு பார்வையான சனி பாதிப்பை தரவில்லை இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் என்ன வித கருத்து தோன்றுகிறதோ? அதை வைத்து உங்களின் செயல் சிரமமுடன் செயல்படும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் வெற்றியை தருவது மிக உறுதியுடன் அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
10-11-2026 செவ்வாய் அதிகாலை 03.33 முதல் 12-11-2026 வியாழன் பகல் 02.33 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழன் காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் விளக்கு போட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.












