நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கன்னி
நுணுக்கமாக ஆராய்ந்து எதையும் செயல்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் அமர்ந்து அட்டமாதிபதி வீட்டை பார்ப்பதால் பல காரியங்கள் வெற்றியை தரும். சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனை பலம் பெறுவது உங்களின் தொழில் மற்றும் உத்தியோகம் எல்லாம் வெற்றியை பெற்றுத் தரும். நினைத்த காரியத்தை வெற்றி கொள்ள நற்பலனை பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து மூன்றாமிட செவ்வாயை பார்ப்பது நல்ல முன்னேற்றமும் உங்களின் முயற்சிகள் வெற்றியையும் பெற்று தரும். பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்க்க கடந்த கால காரிய தடைகள் மேலும் நல்ல படி வளர்ச்சியை தரும். காரியத்தை செயல்படுத்தும் முன்பு பல முறை யோசித்து பின்புலங்களை நன்கு ஆராய்ந்து செயல்படுவீர்கள். யாருக்கும் எந்தவித துன்பமும் உண்டாக அனுமதிக்கமாட்டீர்கள் பொதுவான பிரச்சனைகளை கையாளும் போது உண்மை தன்மை இருப்பவருக்கு உங்களின் முழு ஆதரவையும் தருவீர்கள். கடன் தீர வாய்ப்பு அமையும்.
ராசியில் சுக்கிரன் நீசம் பெற்றாலும் ராசிநாதன் பரிவர்த்தனை பெறுவதால் கலைத்துறையினர் வெற்றி பயணம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆறாமிட சனி ராகுவுடன் லாபாதிபதி சந்திரன் இணைவது வங்கி மூலம் தனிபட்ட கடன் வாங்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும் கடன் கொடுக்க பல நிறுவனம் வந்தாலும் அதில் நமது பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கடன் பெற ஆலோசனை செய்து முடிவு எடுப்பீர்கள். சொந்த காணியை பயன்படுத்த முடியாமல் இருந்த நிலை மாறி நல்ல நிலைக்கு செல்வீர்கள். கூடுதல் பணம் கிடைக்க ஆசைபட்டு இழந்த நிலையிலிருந்து விடுவித்து இனி யோசனைகளை சாதகமாக ஆக்கி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
04-11-2025 செவ்வாய் பகல் 11.45 முதல் 06-11-2025 வியாழன் பகல் 02.14 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு நவகிரக வழிபாடு செய்து பைரவருக்கு ஒன்பது நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.

















