கணேச காயத்திரி மந்திரம்

கணேச காயத்திரி மந்திரம்

“ஓம் தத் புருஷாய விதமஹே
வக்ர துண்டாய தீமஹி
நந்தோ தந்தி ப்ரசோதயாத்”


பொருள் -
முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக, வக்ர துண்டன் மீது தியானம் செய் கிறோம். அவன் நம்மை, அனைத்து செயல்களிலும் உடன் இருந்து வெற்றி பெறச் செய்வானாக. விநாயகப் பெருமானை துதிக்கும் போது மற்ற மந்திரங்கள், அர்ச்சனைகள் முதலியவற்றை செய்வதும், மேற்கண்ட கணேச காயத்திரி மந்திரத்தையும் சொல்லி வழிபடுவதும் நல்லது. 

பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும் போது கணேச காயத்திரியை தினம் 108 முறை சொல்லலாம். இவ்வாறு சொல்வதால் வினைகள் நீங்கும். காரிய தடைகள் அகலும் வெற்றி உண்டாகும் பாவங்கள் விலகும். உடலும், உள்ளமும் வலிமையுடன் திகழும்.