மே மாத ராசி பலன்கள் 2026 - ரிஷபம்
மனதில் பட்டதை செயலில் செய்து காட்ட நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே1
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்தும் குரு தனஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் மிக சிறப்பான நல்ல பலனை பெற்று தரும். உங்களின் யோகாதிபதி சனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது நல்ல பலனை பெற்று தரும்.
உங்களின் தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து குருவின் பார்வை பெறுவதால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க பெறுவீர்கள். எதிரிக்கு கூட கஷ்டம் வரகூடாது என்று நினைக்கும். உங்களுக்கு எத்தனை துன்பம் வந்தாலும் அது பனி போல நீங்கி விடும் குரு தனஸ்தானத்தில் இருப்பது ஏதாவது ஒரு வழியில் பண வரவு இருந்து கொண்டிருக்கும். ராசிநாதன் ஏழாமிடத்தை பார்வை இடுவது சிலருக்கு திருமண வரன் அமையும் சந்தர்ப்பம் அமையும். கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் மீண்டும் இணைவார்கள்.
லாப ஸ்தானத்தில் சனி அமர்ந்து செவ்வாயுடன் இணைவு பெற்று அமைவது எந்த தொழில் செய்தாலும் அதில் சவால் நிறைந்த சில வித காரியங்ளை சந்தித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்க பெறுவீர்கள். எதையும் குறித்த நேரத்தில் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் உங்களை ஊக்கப்படுத்தி நன்மை பெற செய்யும். பொது வாழ்வில் சிறப்பான பலன் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுபடுத்திக் கொள்வீர்கள்.
மாணவர்கள் பெறுபேறுகளில் முரண்பாடு இருந்தாலும் அதனை சரி செய்து கொள்வீர்கள். உயர் கல்வி பயில்வதற்கான முயற்சியை எடுப்பீர்கள். தொழில் கல்வி படிப்பவருக்கு உடனடியாக வாய்ப்பு அமையும். எந்த தொழில் செய்தாலும் அதில் கறாராக இருப்பீர்கள். யாரும் நம்மை குறை சொல்லாத அளவிற்கு கவனமுடன் இருப்பீர்கள். சாதனைகளை செய்ய… ஊக்கப்படுத்த நல்ல நண்பர்களின் துணை உதவி கரமாக அமையும். பால் வளம் சிறப்பாக இருக்கும். வேளாண்மை ஆராய்ச்சி நல்ல பலனை பெற்று தரும்.
அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.அதனால் செலவு வரும். நல்ல பலன் கிட்டாது தடைபட்ட காரியம் படிப்படியாக செயல்பட துவங்கும். சொன்னதை சரியாக செய்து முடிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு விடாமுயற்சியாலும். குறிக்கோள் அடையும் வரை இலக்கை நோக்கி பயணம் செய்வது தடைகளை நீக்கி பயணம் செல்வது உங்களுக்கு புதுபுது அனுபவங்களை உண்டாக்கும். இறை வழிபாடு உங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
05-05-2026 செவ்வாய் பகல் 12.04 முதல் 07-05-2026 வியாழன் இரவு 11.16 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளி கிழமைகளில் அம்மனையும் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வெண்மை நிற பூ வைத்து கற்கண்டு பால் நிவேதனமாக படைத்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர சகல காரியமும் சிறப்பாக அமையும்.
















