மே மாத ராசி பலன்கள் 2026 - மகரம்
மனநிறைவான வாழ்க்கை வாழவேண்மென்று நினைக்கும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி மூன்றாமிடத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதால் நன்மையை பெற்று தருவார். குருவும் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது இன்னும் நல்ல பலனை பெறுவீர்கள். முக்கிய காரியங்களுக்காக வெளியூர் சென்று வருவீர்கள். பொது விடயங்களில் நிதானமாக நடந்து கொள்வீர். பொருளாதார நிலை சீரடையும்.
தனஸ்தானத்தில் ராகு அமர்வது பணவரவுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும். கெட்ட கனவுகள் வந்து பல தொல்லைகளை உண்டாக்கும். உங்களின் முயற்சி ஸ்தானம் பலம் பெறுவது தொடர் காரியங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். எதையும் தாமதம் செய்யாமல் தேவைகளுக்கு உடனே முயற்சி எடுத்து வளம் பெறுங்கள். மூன்றாமிட செவ்வாய் தைரியத்தை கொடுத்தாலும் வாயை கொடுத்து தாமதம் உண்டாக்கி விடுவீர்கள். பொது வாழ்வில் மக்களின் குறைகளை நீக்கி அனைவரும் வளமான வாழ்க்கை உண்டாக உதவி செய்வீர்கள். சனி / செவ்வாய் சேர்க்கை இனி எத்தனை சோதனை வந்தாலும் விடாமுயற்சியும், சகிப்புத்தன்மையும் உண்டாக்கும். சாதாரணமாக வெளி தோற்றத்திற்கு தெரிந்தாலும் செய்யும் செய்கை பலமடங்கு மேலானாதாக இருக்கும்.
நான்காமிடமான சுகஸ்தானத்தில் சூரியனுடன் புதன் இணைவு பெறுவது தனி திறமையுடன் செயல்படுவீர்கள். அரசியலிலும் உத்தியோகத்திலும் நல்ல வரவேற்பை பெறுவீர்கள். கவலைகளை மறந்து இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் உங்களின் வேலையை மட்டும் பார்த்து வருதல் நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமைவது எடுத்த காரியம் ஜெயிக்கும். லாப ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். மறைவு ஸ்தானாதிபதி குரு ஆறில் மறைவு பெறுவது முன்னேற்றம் உண்டாக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றியை தரும். பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்து நல்ல பாராட்டை பெறுவீர்கள். சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். எதற்கு அச்சமின்றி காரியம் செய்வதில் நன்மை உண்டாக்கும். புதிய திட்டங்களுக்கு அடுத்த மாதம் முதல் நல்வழி கிடைக்கும். அதுவரை சற்று கவனமுடன் இருப்பது நல்லது உறவுகளில் பிரிவு இருந்த நிலைமாறி குடும்பத்துடன் இணையும் வாய்ப்பை பெறுவீர்கள். மனிதாபிமான செயல்களை அடிக்கடி செய்து வருவீர்கள். துன்பம் விலகி இனி நன்மை கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டாக்கும். முதலீடு இல்லாத தரகு தொழிலில் நல்ல லாபம் தரும். கலைத்துறையினருக்கு வருமானம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
23-05-2026 சனி காலை 07.49 முதல் 25-05-2026 திங்கள் பகல் 01.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து துவரை அன்னம் வைத்து நெய் தீபமேற்றி உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் உங்களின் சகல காரியமும்அனுகூலமாகும்.
















