மே மாத ராசி பலன்கள் 2026 - கன்னி
நினைத்ததை செயலில் காட்டி வளம் பெறும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் புதன் அட்டம ஸ்தானத்தில் விரையாதிபதியுடன் இணைவு பெறுவதும் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூட எதையும் செய்ய துணியும் குணம் கொண்டு விளங்குவீர்கள். புதிய சகாப்தம் உருவாக துணைநிற்பீர்கள். அறிவியல் பூர்வமான சாதனைகளை செய்து காட்டும் வலிமை உண்டாகும்.
உங்களின் ராசியில் சந்திரன் அமர்ந்து களத்திரஸ்தானத்தை பார்வை இடுவது கூட்டுத் தொழில் செய்து வருபவருக்கும் ஆன்லைன் வர்த்தகம் செய்பவருக்கும் நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். சத்ரு ஸ்தானத்தில் ராகு அமர்வது நோய் நொடிகளிலிருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்வார். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர்கள். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எதையும் பற்றி கவலைபடாமல் நீங்கள் உங்களின் கடமையை செய்து வருவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து அதன் வழியில் செல்வீர்கள்.
களத்திர ஸ்தானத்தில் சனியுடன் செவ்வாய் இணைவு பெறுவது நண்பர்களுடன் சற்று கவனமாக நடந்து கொள்வது நல்லது. கூட்டு தொழிலில் முதலீடு செய்யும் போது முக்கியமாக சிந்தித்து செயல்படுவதும் உலக வர்த்தக முதலீடுகளில் சில காலம் கழித்து செய்வது நன்மையை தரும். எதிரிகளை எப்படி வெல்லலாம் என்ற யுக்தி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதன்படி செயல்பட்டாலும் சனி / செவ்வாய் இணைவு எதிரிக்கு சாதகமாக அமையும் என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல காலமாக அமையும். உதவிகளை தேடாமலே உங்களுக்கு வாய்ப்பு வந்து சேரும்.
தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து செய்யும் தொழிலில் சில சிரமங்களை செய்வார். தனித்த குரு அவதிகளை தருவார். சிலருக்கு இடமாற்றம், தொழில் மாற்றங்கள் கூட நடக்கலாம். அரசியலில் உங்களின் அனுபவம் சுற்று வித்தியாசமாக அமையும். நீங்கள் இதுவரை தெரிந்த கொள்ளாத சில விடயங்களை தெரிந்து கொள்வீர்கள். மருத்துவ துறையினருக்கு நல்ல காலமாக அமையும். விரையாதிபதி அட்டம ஸ்தானத்தில் உச்சம் பெறுவது உத்தியோகத்திலும், அரசியலிலும் எதிர்பாராத நன்மை உண்டாகும். கடன்பட்டு கஷ்டத்தில் இருப்பவருக்கு சீக்கிரமே கடன் அடைக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். சுமையாக இருந்த காரியங்கள் படிபடியாக முடிவுக்கு வரும். எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
14-05-2026 வியாழன் இரவு 08.06 முதல் 16-05-2026 சனி இரவு 11.11 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு பூ சாற்றி நெய் தீபம் ஏற்றியும், சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30) பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.
















