ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மிதுனம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மிதுனம்

பேராற்றலும், பெருமிதமும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் குரு ராசியிலும் மே மாதம் முதல் தனஸ்தானத்திலும் அமர்வதும் உங்களின் ராசிநாதன் ஏழாமிடத்தில் அமர்வதும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்து வைத்தவராக எல்லாம் பெறுவீர்கள். சனி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனை பார்ப்பது உங்களின் வளர்ச்சி வழி கிடைக்கும்.
 
இந்த ஆண்டு முக்கிய பெயர்ச்சிகள் வருவது 06.03.2026 அன்று சனி பெயர்ச்சியும், 26.05.2026 குரு பெயர்ச்சியும், 19.11.2026 முதல் ராகு / கேது பெயர்ச்சியும் வருகிறது. இதில் உங்களுக்கு சாதகமான குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் உங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமையும். குரு கேது இணைவு தனஸ்தானத்தில் அமைவது உங்களின் பெரும் வளர்ச்சி உண்டாக வழிவகுக்கும். கேட்டதை கொடுக்கும் காலமாக அமையும்.
 
இதுவரை தொழில் இல்லாமல் இருந்து வந்திருந்தால் நல்ல தொழில் மற்றும் வேலை கிடைக்கப் பெறுவீர்கள். யாரையும் எதிர்கொள்ளும் வலிமையை பெறுவீர்கள். குடும்ப பாரத்தை இறக்கி வைத்து சரியான பாதையில் செயல்பட வழி கிடைக்கும். கலைதுறையினருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து சேரும். ஆன்லைன் வர்த்தகத்தில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும்  கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்வீர்கள். குருவின் பார்வை பெறுமிடம் சிறப்பு. ராகுவை குருபார்க்கும் போது ராகுவால் வரும் துன்பம், தீரும். ஆன்மீக சேவை உங்களை ஊக்கபடுத்தும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
5, 7, 9.
 
அதிர்ஷ்ட மாதம்:
 
பெப்ரவரி, ஜுலை, நவம்பர், டிசம்பர்.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து பைரவருக்கும் விளக்கு ஏற்றி புளி சாதம் வைத்து வேண்டிக் கொண்டு வர சகல கஷ்டமும் நீங்கும்.