குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - ரிஷபம்

தன்னிகரில்லாத செயல்களை துரிதபடுத்தி செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் வரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானமான இடங்களை பார்வை இடுவது உங்களின் ராசிக்கு ஏழாமிடத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் முன்பு பார்த்து வந்தால் நற்பலன்களை அடைந்து வந்தீர்கள். இனி மறைவு ஸ்தானங்களின் பார்வையால் உங்களுக்கு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடும் வாய்ப்புகள் அமையும்.
ஆறாமிடமிடத்தை குரு பார்ப்பதால் வங்கி மூலம் கடன் பெற்று பழைய கடன்களை தீர்த்து கொள்வதும், எடுத்த காரியத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதையும் பிறரின் உதவியுடன் செய்து வந்த நீங்கள் இனி தனித்து செயல்படுவீர்கள். 06-06-2025 முதல் 06-07-2025 வரை குரு அஸ்தங்கம் அடைவதால் பெரும்பாலும் தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து அத்தியாவசியமான செயல்களை செய்வது நல்லது.
அட்டம ஸ்தானாதிபதி குரு அந்த இடத்தை பார்ப்பதால் நம்பிக்கையான நண்பர்கள், உறவுகாரர்களாக இருந்தாலும் பிணைய இடுவதும் நான் பொறுப்பு என்று ஏற்று கொள்வதும் தவிர்ப்பது நல்லது.
உங்களின் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். இருக்கும் தொழிலை விருத்தி செய்து கொள்வதற்குரிய வேலைகளை செய்வது நல்லது. 08-10-2025 முதல் அதிசாரமாக குரு கடகத்திற்கு செல்வதால் அதுவரை உங்களின் செயல்பாடு சற்று கவனமாக இருப்பது நல்லது. அதிசார பலன்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எதையும் திறம்பட செய்து வளம் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை பெறுவதும் உங்களுக்கு குரு சண்டாள யோக பலன்களை பெற செய்யும்.
பரிகாரங்கள்:
வியாழகிழமை காலை 06 - 07 மணிக்குள் நவகிரக குருவுக்கு மிளகு கலந்த அன்னம் வைத்து மஞ்சள் தூவி நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள நற்பலன்கள் சிறப்பாக அமையும்.