குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - தனுசு

தனக்கென்று ஒரு கொள்கை வைத்து செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
இதுவரை ராசிநாதனாகிய குரு ஆறாமிடத்தில் இருந்து வரும் 11-05-2025 முதல் ராசியை பார்ப்பதும் ஏழாமிடத்தில் அமர்வதும் லாபஸ்தானத்தையும், முயற்சிஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசகாரர்களுக்கு நல்ல காலமாகவே அமையும். எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.
ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் மனசஞ்சலங்கள் நீங்கி பல நாட்கள் மன வருத்தம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி படிபடியாக இயல்பு நிலைக்கு வருவீர்கள். எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். முக்கிய விஜயங்களில் தனி திறமை கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
உங்களின் முயற்சிகள் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையும். செய்யும் தொழிலிலும் இனி உங்களின் ஈடுபாடும் தொடர் முயற்சியும் உங்களை மேலும் வெற்றி பெற செய்யும் சனி / ராகு மூன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல சூழ்நிலை என்றாலும் அவர்களுக்கு குருவின் பார்பையும் பெறுவது மிக சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.
லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவது எதிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து லாபகரமான வளர்ச்சியை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையை பெறுவீர்கள். பல சோதனைகளை கடந்து மேன்மையை அடைவீர்கள். எதிர்கால வளங்களை உறுதி செய்து வெற்றியை காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் அன்பை பெறுவார்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குரு வழிபாடு செய்து தீபமேற்றி வேண்டு கொள்வதும் ஜீவசமாதிகளில் சென்று சிறிது நேரம் தியானம் செய்து வருவதும் சிறப்பான பலனை பெற்று தரும்.