குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - சிம்மம்
துணிச்சலுடன் எதையும் சாதிக்க வேண்டுமென்று நினைத்து செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு பஞ்சம அட்டம ஸ்தானாதிபதியாகி குரு பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு வரும் 26-05-2026 முதல் பெயர்ச்சி ஆகிறார். மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். சில காரியங்களை மிக எளிதாக செய்வீர்கள். பொருளாதார நிலை சீராகும்.
பொதுவாக விரைய குரு பொருளாதாத்தில் சில தடைகளையும். வேண்டாத செலவுகளை செய்யும் படி செய்வார். உங்களின் ராசிக்கு அட்டமாதிபதி விரையத்தில் அமர்வது நல்ல சூழ்நிலையே உருவாகும். எதிர்பாராத தன வரவுகளும், வசதி வாய்ப்பையும் பெறுவீர்கள். தனக்கு எது சரியோ அதை செய்வீர்கள். தனக்கு பிடிக்காததை யார் செய்தாலும் அதை அனுமதிக்க மாட்டீர்கள். குரு பாக்குமிடம் சிறப்பு என்பது போல ஆறாமிடத்தை குரு பார்வை இடுவது ஆறாமிடம் …கடன் பெற்று தொழிலை விருத்தி அடைய செய்வீர்கள். வங்கி மூலம் முயற்சி செய்து கடன் எளிதாக கிடைக்க பெறுவீர்கள். சுமையாக இருந்த பல காரியம் எளிதாக நடக்கும். மறைமுக எதிரிகளை அடையாளம் காணுவீர்கள். எதையும் சாதூர்யமாக செய்யும் பக்குவம் பெறுவீர்கள். அட்டமஸ்தானத்தை குரு பார்வை இடுவது இன்னும் சிறப்பு.
இதுவரை எது காரிய தடையாக இருந்ததோ அதனை செயல்படுத்த துவங்குவீர்கள். பாதுகாப்பு மிகவும் முக்கியம். எந்த காரியமாக இருந்தாலும். அதனை கவனத்துடனும், துரிதமாகவும் செயல்படுவத்துவீர்கள். யார் சொல்வதையும் நம்பாமல் உங்களின் யுக்தியின் படி செயல்படுவது நல்லது. அட்டம சனியை குரு பார்வை இடுவது அட்டம சனியின் தாக்கமில்லாமல் தடை செய்யும் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். கூட்டாளிகளின் மீது அதிக நம்பிக்கை வைத்து எதையும் உடனே செய்து விட கூடாது. எதை ஆய்வு செய்தபின் முடிவு செய்ய வேண்டும்.
20-10-2026 முதல் 22-12-2026 குரு அதிசாரமாக ராசியில் அமர்வது உங்களுக்கு நற்பலன்களை பெற்று தரும். சிறு தடைபட்ட காரியங்கள் விரைவில் நடக்கும். திருமண காரியம், பொருளாதார மேன்மையை அடைவீர்கள். இரண்டு மாத காலம் உங்களின் கனவு நனவாகும். நினைத்ததை சாதித்து கொள்வீர்கள். அடுத்த வக்கிரகதியாகி குரு மீண்டும் கடகத்திற்கு போகும் போது சுகஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் உடல்நலன் சிறப்பாக அமையும். புதிய வாகனம் வாங்குவது, வீடு புதுப்பித்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவியும், மரியாதையும் கிடைக்கும். எதையும் கேட்டு பெறாமல் உங்களுக்கு அமையும். விளையாட்டு வீரர்களுக்கு சாதனை செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். உறவுகளை விட்டு சிலர் பிரிந்து செல்ல வேண்டி வரும். கடமைகளை செய்து அதற்கான பலன் அடைவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்த வியாபார விருத்தியை அடைவீர்கள். சாதித்து காட்டுவது உங்களின் இயல்பு அதனை எந்த தடை வந்தாலும் விடாமுயற்சியுடன் சாதிப்பீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் மூன்று நெய் தீபம் ஏற்றி கொண்டைகடலை சுண்டல் வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கி வருவது மிக சிறப்பான பலனையும், தடை நீங்கி சுபிட்சமும் பெறுவீர்கள்.
















