மனிதன் அசாதாரண சக்திகளும், ஈ.எஸ்.பி.யும்(

மனிதன் அசாதாரண சக்திகளும், ஈ.எஸ்.பி.யும்(

பலவிதமான பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். அதுதான் கல்வியின்மை. 

 
கல்வி அறிவினால் ஏழ்மையில் இருந்து விடுதலை பெறலாம். ஒரு நாட்டின் முன்னேற்றமே கல்வியறிவில்தான் இருக்கிறது என்கிறார் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த டாக்டர் லோசனோவ்.
 
இவர் பல்கேரியாவின் தலைசிறந்த பேரா சைக்காலஜி நிபுணர்.
 
இவர் பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் உள்ள Institute of Sugestology and parapsychology நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கிறார். பல்கேரியாவில் இவர் தலைமையில் E.S.P. ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
இந்த கல்வி நிறுவனத்தில் P.S.I. ஆராய்ச்சி, E.S.P. ஆராய்ச்சி யோகா பற்றிய ஆராய்ச்சி PK, Suggestion மற்றும் கண்ணில்லாத பார்வை (Eyeless sight) பற்றி முக்கியமாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.
 
மேலும் டெலிபதியில் இருந்து தாவரங்களின் உணரும் சக்தி வரை ஆராய்ச்சியும் செய்கிறார்கள். அதனால் தாவரங்களின் வளர்ச்சியை மூன்று மடங்கு அதிகமாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
 
தாவரங்களின் தன்மைகளை டெலிபதியால் மாற்ற முடியும் என்றும், அவற்றைக் கண்காணிக்க தகுந்த கருவிகளையும் வைத்துச் சோதனை செய்திருக்கிறார்கள்.
 
Suggestology என்பதை டாக்டர் லோசனோவ்தான் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது தகுந்த சொற்களைச் சொல்லியே ஒருவரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
 
ஒரு சொல்லையே விடாமல் தினசரி சொல்லிக் கொண்டிருந்தால் அதுபடி நடத்துவிடுகிறது என்கிறார்.
 
ஃபிரெஞ்சுக்காரரான எமிலிகூயி என்பவர் இது போன்ற கட்டளைச் சொற்களாலேயே லட்சக்கணக்கானவர்களை குணப்படுத்தியிருக்கிறார். அவரது பிரபலமான சொல்
 
Everyday, in Every Way, I am
Getting Better and Better!
 
இந்த வாசகத்தை உபயோகித்தே உலகெங்கிலும் பல இலட்சம் மக்களை குணப்படுத்தியிருக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நமது மகான்கள் “கவசங்கள்” என்று பாராயணத்துக்குரிய பாடல்களாக சொல்லியிருப்பதையும் கவனிக்கத்தக்கது. சிவ கவசம், சக்தி கவசம், விநாயகர் கவசம், ஷண்முகக் கவசம், அனுமான் கவசம் என்று எல்லா தெய்வங்களையும் வைத்து மக்களைப் பாதுகாக்க இத்தகைய கவசங்களை நமக்கு கொடுத்துப் போயிருக்கிறார்கள்.
 
மேலே சொன்ன Suggestology என்பது மந்திர உச்சாடனம் போலத்தான் இருக்கிறது.
 
இவர்கள் விஞ்ஞானபூர்வமாக இத்தகைய சொற்கட்டுக்களை ஆராய்ச்சி செய்து நிரூபித்திருக்கிறார்கள்.
 
இந்த கட்டளைச் சொற்களை தீவிர ஆராய்ச்சி செய்து இவற்றை மக்களுக்கு எப்படி உதவி செய்ய வைக்கலாம் என்றும் மற்றும் தாவர வர்க்கங்களுக்கும் டெலிபதி மூலம் கட்டளைகளைப் பிறப்பித்தும் அதன்பின் விளைவுகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
 
மேல்நாட்டினர் பேரா சைக்காலஜி என்று சொல்வதை நம் நாட்டில் நமது மகான்கள், முனிவர்கள். ரிஷிகள் எல்லாம் தெய்வத்தின் பெயரால் காரியசித்தி மந்திரங்கள், பயத்தை போக்கும் மந்திரங்கள், செல்வத்தைக் கொடுக்கும் மந்திரங்கள், சந்தான பாக்யத்தைக் கொடுக்கும் மந்திரங்கள் என்று ஏராளமான மந்திர சாஸ்திரங்களையும் இயற்றி வைத்து உள்ளார்கள். அதர்வண வேதம் முழுக்க மந்திரங்களேதான் நிறைந்துள்ளன.
 
ஒவ்வொரு காரியத்துக்கும் மந்திரங்களை நம் முன்னோர்கள் இயற்றி வைத்துள்ளார்கள்.
 
நாம் அவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
 
சர்வகலாசாலைகளிலும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் விஞ்ஞானபூர்வமாக மந்திர சாஸ்திர வல்லுநர்களைக் கொண்டு அதன் சக்தியை ஆராய்ந்து பார்த்தார்களானால் உண்மை விளங்கும்.
 
மந்திர உச்சாடனங்கள், மந்திர ஜெபம் செய்வது எல்லாமே ஈ.எஸ்.பி. சக்தியினை அதிகரிக்கச் செய்கிறது.
 
Psychic Powers என்ற அபஸ்ரீர்வ சக்திகளை தியானங்களாலும், மந்திர தியானங்களாலும் நாம் அடைய முடியும்.
 
யோக தியானங்களால் அஷ்டமா சித்திகளையும் அடைய முடியும் என்று நம் நாட்டு யோகிகள் ஏராளமான யோக நூல்களை எழுதியுள்ளார்கள்.
 
திருமந்திரத்திலே திருமூலர் மந்திரங்களில் ஆகர்ஷணம், வசியம், உச்சாடனம், வித்வேஷணம், மாரணம் என்று பல தலைப்புகளில் அதற்கான மந்திரங்கள், யந்திரங்கள் பிரயோக முறைகளையும் விரிவாகக் கொடுத்திருக்கிறார்.
 
ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரியும் இத்தகைய மந்திர யந்திரங்களடங்கிய ஒரு மாந்திரீக தாந்திரீக அனுபவமடைய ஏற்படுத்திய ஓர் அற்புதமான நூலாகும்.
 
அதுபோல தேவி மஹாத்மியத்திலும் ஏராளமான மந்திரங்கள் நிரம்பியிருக்கிறது.
 
அதேபோல சுதர்சன மந்திரம், நாராயண கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், துர்க்கா கவசம், பைரவ மந்திரங்கள், பத்ரகாளி மந்திரங்கள் என்று ஏராளமாக உள்ளன.
 
மேலை நாட்டினர் இறைவன் சக்தியை Cosmic power Universal mind, subconcious mind என்கிறார்கள்.
 
கூடுவிட்டுக் கூடு பாய்வதை Astral Travel என்கிறார்கள்.
 
மந்திர தந்திர சாஸ்திரங்களை அவர்கள் Occultism என்று அழைக்கிறார்கள்.
 
நாம் பஞ்சபூதங்கள் என்று சொல்வதை அவர்கள் Five Elements என்கிறார்கள்.
 
ஆகவே, விஞ்ஞானம் எல்லாமே ஞானத்தில் இருந்து வந்ததுதான்.
 
ஞானம் என்பது அறிவு, ஆற்றல், இவற்றைத் தருவது இறைவனே. ஆகவே, ஞானம் இல்லாமல் விஞ்ஞானம் இல்லை.
 
ஏதாவது ஒரு வகையில் மேலை நாட்டினர் கீழ்த்திசை நாடுகளிடம் தொடர்பு கொண்டு ஞானத்தைக் கற்று விஞ்ஞானம் என்கிறார்கள்.
 
மேலை நாட்டு அறிஞர்கள், மேதைகள் எல்லாம் இந்தியநாடு உட்பட பல கீழ்த்திசை நாடுகளின் கலாசாரம். 
 
அதன் பண்பாடு, தெய்வீகம் மற்றும் பல இரகசியங்களை அறிந்து இருக்கிறார்கள்.
 
அணுசக்தியைப் பற்றி மேலை நாடுகளில் இந்த நூற்றாண்டில்தான் அறிந்திருக்கிறார்கள்.
 
அணுவின் தன்மையை திருமூலர் உணர்ந்து இருந்தார். அகஸ்தியர் ஓர் அணு ஞானி அணுவைப் பிளந்தால் அண்டம் பொறுக்காது. அணுவிற்கணுவாய். அப்பாலுக்கப் பாலாய் என்று திருமுறைகள் கூறுகின்றன.
 
அணுசக்தியை உணர்ந்தவர்கள் நமது யோகிகள். அணுவைப் பிரிக்கவும், சேர்க்கவும் அவர்களால் முடியும். அவனன்றி அணுவும் அசையாது என்கிறார்கள் நமது ஞானிகள்.
 
அணுவின் அசைவை காட்டியிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் நடராஜ உருவம். நடராஜ நடனத் தத்துவம் அணுவின் தன்மைகளை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
 
நடராஜ தத்துவத்தில் அணு விஞ்ஞான இரகசியத்தையே அடக்கி சூக்குமமாக வைத்துள்ளார்கள் நமது மகான்கள்.
 
பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்தில் அணுவின் சக்தி இருப்பதை திருமூலர் நிரூபித்திருக்கிறார். ஆகவே நமது ஞானிகள் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள், பிகே. ஆற்றல்கள் மற்றும் சகல விதமான விஞ்ஞான ஆற்றல்களையும் பெற்றவர்களாகவும் அவற்றைச் செயல்படுத்தும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
 
ஞானிகள், மகான்கள் பார்வையினாலேயே பல நோய்களைக் குணப்படுத்தி இருக்கிறார்கள். கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தாலே அவர்களது சக்தி பரவுகிறது. இத்தகைய சக்தியை எல்லாம் தற்கால விஞ்ஞானிகள் ஓர் ஆச்சரியமான செயலாக நினைக்கிறார்கள்.
 
- என்.தம்மண்ணன்