பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - மகரம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - மகரம்

பிறரின் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்ந்தும் யோகாதிபதியான சுக்கிரன் ராசியில் அமர்ந்தும் இருப்பது இனிவரும் களத்தில் உங்களின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக அமையும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சுமூகமான வளர்ச்சியுடன் பொருளாதார வளர்ச்சியும் இனி நன்றாக செயல்பட துவங்கும். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் நீங்களே களத்தில் இறங்கி செயல்படுவீர்கள். எல்லோரும் பயன்பெறும் வகையில் அனைத்தும் அமையும். சுறுப்பான உங்களின் செயல்பட்டுகளால் உடனே உங்களின் காரியம் சிறக்கும்.
 
அடுத்த மாதம் முதல் உங்களுக்கு ஏழரை சனி விடுதலை பெறுவதால் சனி உங்களுக்கு இனி நல்ல பலன்களை செய்வார். பல நேரங்களில் சொன்னடி செயல்பட முடியாமல் போய் தாமதம் உண்டாகி இருக்கும். இனி அந்த நிலை வராது. கண்ணில் தெரிந்ததை நம்பி விடுவீர்கள். இனி எச்சரிக்கையுடன் கண்காணித்து செயல்படுவீர்கள். உடல் நலமில்லாதவர்களுக்கு உதவுவதை தன் கடமையாக செய்வீர்கள். யாரும் உங்கள் முன் கஷ்டத்தை சொல்லி அழுதால் உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். வேலை செய்யுமிடத்தில் சக தொழிலாளர்களின் துன்பங்களை நீக்க உதவுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கு இனி தடைகள் நீங்கி தொழில் விருத்தி உண்டாகும். எதையும் சற்று யோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது. சனி கொடுத்தால் யார் தடுப்பார் உங்களுக்கு இனி நல்ல காலம் தான். இனி மேல் வாழ்வில் சகல யோகங்களையும், வசதிகளையும் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினர் தொலை தூர பயணம் செய்ய வேண்டிவரும் நல்ல நண்பர்களின் சேர்க்கை உங்களை ஊக்கபடுத்தும். குடும்ப பாரம் சிறிது சிறிதாக மறையும். வீராப்பை விட்டுவிட்டு இனி சாத்மீகமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். விளையாட்டுத் துறையினருக்கு சவால்கள் சரியாக போட்டியாக இருந்தாலும் அதில் வெற்றியையும் பெறுவீர்கள். மாணவர்களிடம் கல்வி அறிவு விரிவடையும். எந்த பயிற்சியாக இருந்தாலும் அதை உடனே புரிந்து கொள்வீர்கள். ஆன்மீக தேடலில் இருப்பவருக்கும் அதற்கு உண்டான வழி கிடைக்கும். உடல் சோர்வு அடிக்கடி வந்தாலும் ஓய்வு பெற்று சரிசெய்து விடுவீர்கள். அரசியல் தலையீடுகளை கொண்ட நிறுவனங்களில் உங்களுக்கு நல்ல மரியாதையும், சலுகைகளும் கிடைக்கும். செய்யும் தொழிலில் பல சோதனைகளை கண்டு மீள முடியாமல் இருந்த நிலைமாறி அதற்கு மாற்று வழியை கொண்டு செயல்பட்டு விடுதலை பெறுவீர்கள். விளையாட்டு பயின்றவர் வெளியில் சென்று வரும் வாய்ப்பை பெறுவீர்கள். தனியாக எதையும் செய்யாமல் கூட்டு முயற்சி மூலம் செய்து நன்மையை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், வெண்மை, ஓரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, செவ்வாய், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
02-02-2026 திங்கள் இரவு 12.33 முதல் 05-02-2026 வியாழன் காலை 07.01 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் 04.30 - 06.00 மணி தொடர்ந்து பைரவர் வழிபாடு செய்து முந்திரி பருப்பு மாலை கட்டி போட்டு எலுமிச்சை பழ தோலில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபட்டு வர உங்களின் சகல காரியமும் சிறப்பாக அமையும்.