ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - மேஷம்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - மேஷம்

வித்தியாசமான சிந்தனையுடன் செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை பார்வை இடுவது தொழிலிலும் உத்தியோகத்திலும் சிறப்பான வளர்ச்சி பெறுவீர்கள். மூத்த சகோதரர்களின் மூலம் சில காரியம் கைகூடும். வரும் காலங்களில் உங்களுக்கு சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுகஸ்தானாதிபதி சந்திரன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தில் ராகுவோடு இணைவு பெறுவது நல்ல தொழில் வளர்ச்சியை பெற்று தரும். 
 
மேலும் சுகஸ்தானத்தில் சூரியனுடன் புதனும் குருவும் இணைவு பெறுவது புத்திசாலித் தனமான செயல்களாலும் தேவையான ஆடம்பர பொருட்கள் புதிய வாகனம் போன்ற வற்றின் மூலம் வசதியை பெறுவீர்கள். தானாதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தாத்தில் கேதுவுடன் அமர்வது பெண்களால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலிலும், உத்தி யோகத்திலும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். நினைத்த காரியத்தை எளிதில் செய்து நல்ல பலன் அடைவீர்கள்.
 
குரு உச்சம் பெற்று எட்டாம் இடம், தொழில் ஸ்தானம் விரைய ஸ்தானத்தை பார்வை இடுவதால் மறைவு ஸ்தானாதிபதி குரு மறைவு ஸ்தானங்களை பார்வை செய்வது சிறப்பான பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் சிறப்பு ஏழரை சனி காலம் என்பதால் குரு பார்வையால் உங்களுக்கு கெடுபலன்களை காட்டிலும் நல்ல பலன்களே இனி அமையும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து ஆக்க பூர்வ செயல்களை செய்து வெற்றி காண்பீர்கள். 
 
விளையாட்டு துறையில் இருப்பவருக்கு போட்டியாளர்களை வெல்லும் சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். விரைய ஸ்தானத்தில் சனி அமர்ந்து கடுமையான மன உளைச்சலையும் பொருளாதார சிக்கல்களையும் கொடுத்து வருவது சனி செய்யும் வேலை அவருக்கு வீடு கொடுத்த குருவின் பார்வை படுவதால் சனியில் கெடுபலன்கள் செய்யாமல் குரு பார்த்து கொள்வார்கள். சொல்லிலும் செயலிலும் வல்லமை பெற்று மேன்மை அடைவீர்கள். உங்களின் முயற்சியால் நினைத்த காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
செவ்வாய், வெள்ளி, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
20-08-2026 வியாழன் அதிகாலை 05.53 முதல் 22-08-2026 சனி மாலை 05.15 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு கொள்ளு புட்டு செய்து வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.