ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - மீனம்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - மீனம்

பண்பும் பரிவும் கொண்டு அனைவரிடமும் அன்பாக செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவது மிக சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். ஜென்ம சனியின் தாக்கமின்றி உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். கிடைத்ததற்கு அரிய பொக்கிசமாக எதிர்பாராத நல்ல பலன்களையும் பெறுவீர்கள். ஆன்மீக தரிசனம் பெறுவது கடவுளின் அருள் பார்வை பெற்று மனநிறைவு பெறுவீர்கள். இதுவரை எத்தனை சோதனைகள் வந்தாலும் அதில் கவனம் செலுத்தாமல் உங்களின் பணியை செய்து வந்தது போல தொடர்ந்து செயல்படுவீர்கள்.
 
தனஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் மூன்றில் அமர்ந்து உங்களின் பாக்கிய ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் ஆன்மீக பயணம் சிறக்க வழிவகுக்கும். புனித யாத்திரை செல்வது தீர்த்த யாத்திரை சென்று புனித நீராடுவது போன்ற பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் பார்வையால் மேன்மை அடையும் எந்த தொழில் செய்தாலும் அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும் படியான நல்ல வாய்ப்பு அமையும். எதை சாதிக்க வேண்டுமென்று எண்ணி செயல்பட்டீர்களோ அதற்கான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். இசை கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். அரங்கேற்றம் செய்ய நினைப்பவருக்கு அதற்கு வாய்ப்பு அமையும். தன் திறமையை வெளி உலகிற்கு காட்டுவீர்கள்.
 
பொது விடயங்களில் ஆர்வம் இல்லை என்றாலும் மற்றவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவீர்கள். எதையும் பிடிவாதமின்றி செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். சிலரின் பிடிவாதமான போக்கு உங்களுக்கு பிடிக்காது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இடுவது ராசிநாதன் குரு பார்வையும் கிடைப்பது நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அதுபோல சுகஸ்தானாதிபதி புதன் பார்வை லாபஸ்தானத்தில் அமைவது இன்னும் சில இலக்குகளை அடைய நீங்கள் எடுக்கும் யுக்திகள் நல்ல பலனை பெற்று தரும். 
 
வரவுகளை மட்டுமே பார்க்காமல் சில செலவுகளால் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து இதனை எப்படி மேன்மை படுத்துவது போல ஆராய்ச்சி.. உங்களுக்கு புதனால், அமையும். அதுபோல குரு பார்வையும் லாபஸ்தானத்திற்கு இருப்பதால் எல்லாம் சிறப்பாக அமையும். ஆறாமிட சுக்கிரன் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் விட்டு கொடுத்து சரி செய்து கொள்வீர்கள். கேதுவின் தாக்கம் அவ்வளவு பாதிப்பை தராது இருந்தாலும் சிறு சிறு சச்சரவு இருக்கும். விரைய ஸ்தானத்தில் ராகுவுடன் சந்திரன் இணைவு தாக்கமின்மை உங்களுக்கு சில நேரம் கஷ்டத்தை கொடுக்கும். புதிய முயற்சிகள் சிறுதடைபடும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், ஞாயிறு, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
17-08-2026 திங்கள் இரவு 08.15 முதல் 20-08-2026 வியாழன் அதிகாலை 05.52 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ளவும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை நிற பூ வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டு வர சகல காரியமும் வெற்றியை தரும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554