ஜகத் பிரதம மங்கள நாமம்!

ஜகத் பிரதம மங்கள நாமம்!

ராமன் பகவானின் அவதாரம் என்பதால் பகவானை மஹாபாரதம் மங்களானாம் ச மங்களம் என்று வர்ணிப்பதால் ராம என்ற பெயரை ஜகத் ப்ரதம மங்களம் என்று காளிதாஸன் விசேஷித்துச் சொல்லியு்ளார்.

 
எனவே ராமன் என்ற சொல் உலகத்திற்கே மங்களமானது. நன்மையைச் செய்வது. 
 
ஸ்ரீ ராமன் பரமாத்மாவான நாராயண ஸ்வரூபம் என்றால்அவனது நாமம் ஜீவாத்மாவாகும். ஸ்ரீ ராமனும் அவன் நாமமும் ஒன்றே.
 
நமது பூர்வ ஜன்ம கர்ம வினைப் பயன்களைத் தொலைக்க, மரண ஜன்ம சுழலிலிருந்து விடுவித்துக் கொள்ள நமக்கு இஹ வாழ்வில் கவசமாகவும், ரக்ஷையாகவும் விளங்குவது ஸ்ரீ ராம நாமம் ஒன்று தான்.
 
ஸ்ரீ ராம நாமம் வேடன் வால்மீகியை மஹரிஷி வால்மீகியாக மாற்றியது வரலாறு.
 
ஸாக்ஷாத் ஸ்ரீ ராமனை லக்ஷியமாகக்கொண்டு “ராம ராம” என்று மனஸாரச் சொல்லிக் கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்தமலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.
 
நன்மையும் செல்வமும நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டே ழுத்தினால்
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்