ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - கும்பம்
எடுத்த முடிவில் கடைசி வரை உறுதியாக நிற்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலில் முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் பெறுவீர்கள். கடந்த கால நிகழ்வுகள் போல் இல்லாமல் எதையும் சாதிக்கும் மனநிலையை பெறுவீர்கள். சமயத்திற்கு தகுந்தபடி மாறும் குணமுள்ளவர்களின் சந்திப்பை தவிர்த்து விடுவீர்கள். அரசியலிலும், அரசு பணிகளிலும் உங்களின் செல்வாக்கு உயரும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிபடுத்தி விடுவீர்கள். குறுகிய காலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
உங்களின் ராசியில் சந்திரனுடன் ராகு இணைவு பெறுவது மனரீதியான குழப்பம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்களில் தடை எதுவும் வராது. குறித்த காலத்தில் எதையும் சாதித்து காட்டும் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சுமையாக இதுவரை இருந்த அனைத்து காரியமும் இனி எளிமையாக அமையும். யாரை இதுவரை நம்பி கொண்டிருந்தீர் களோ… அவரை பற்றி உண்மை தெரிய வந்து இனி நாமே அதை செய்து கொள்ளலாம்.என தீர்மானிப்பீர்கள்.
உங்களின் பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்க யாருக்காக காத்து கொண்டிருந்தீர்களோ அவரால் இனி நமக்கு பலன் இலை என்பதை தெரிந்த பின்பு சுய முயற்சிக்கு வந்து வெற்றி கொள்வீர்கள். சுகஸ்தானத்தின் செவ்வாய் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் தானாதிபதி செவ்வாயின் பார்வை யால் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும்.
ஆறாமிடத்தில் சூரியன் அமர்வது பொது எதிரிகளின் தொல்லை நீங்க பெறுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுபடுத்தி கொள்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி புதிய கடன் பெற்று பழைய கடன்களையும் சரி செய்து விடுவீர்கள். இதுவரை நீடித்த சட்ட ரீதியான பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆறாமிட புதன் உங்களுக்கு மறைமுகமான உதவிகளை செய்து தருவார். இதுவரை காணாமல் போன ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகும்.
ஆறாமிட குரு வங்கி மூலம் கடன் பெற்று பல பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகளை எட்டுவீர்கள். குருவின் அருளினால் உங்களின் கடுமை குறைந்து நல்ல பலனை பெறுவீர்கள். ஏழாமிட சுக்கிரன் கேதுவுடன் இணைவு பெறுவது மேலும் பல வெற்றியை பெறுவதற்கு உறுதுணையாக செய்படுவீர்கள். குடும்பத்தில் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் களைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசி சரி செய்து கொள்வீர்கள். அமைதியை நிலை நாட்டிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சில சங்கடம் வந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
15-08-2026 சனி பகல் 01.03 முதல் 17-08-2026 திங்கள் கிழமை இரவு 08.14 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவரையும், செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும் வணங்கி, விளக்கு ஏற்றி, தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறி நினைத்ததை அடைவீர்கள்.
















