2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மகரம்

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லி செயல்படும் மகர ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கி நன்மை அடைவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்வது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அன்னிய உதவிகள் பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் அதிபதி செவ்வாய் உங்களின் ராசியில் உச்சம் பெறுவதாலும் செவ்வாய் உங்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.
முதலீடுகள் இல்லாத தொழிலில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்குமு். திருமண முயற்சிகள் வெற்றியை தரும். அட்டமாதிபதி சூரியன் விரையத்தில் அமர்வதால் சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடு கொண்டவருக்கு முக்கிய பிரமுகர் சந்திப்பு கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நடந்த ந்த குழப்பம் சர்ச்சையும் இந்த ஆண்டு முடிவக்கு வரும்.
பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு ஊக்கத்தை பெற்றுத் தரும். சரியான பாதைகளை தேர்வு செய்து வழிநடத்தி செல்வீர்கள். பொது வாழ்விலும், தொழிற்சங்க நிர்வாக பதவிலும் உங்களின் செயல்பாடுகள் ஏற்றத்தை பெற்று தரும். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற பலவகையில் பாடுபடுவீர்கள். உங்களின் பாக்கியாதிபதி புதன் லாபஸ்தானத்தில் அமர்வதும், குரு பார்வை ராசியில் படுவதும் உங்களுக்கு சரியான வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்கும்.
இந்த ஆண்டு உங்களுக்கு பல நல்வழிகளை காட்டி தொழிலிலும், உத்தியோகத்திலும் வளம் பெற செய்யும். கலைத்துறையினர் புதிய நிகழ்ச்சிகளில் காற்று கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தடை நீங்கி கல்வியின் புதிய பரிணாமத்தை உண்டாக்கும். எளிதில் எதையும் செய்து விடுவோம் என்று நினைத்து செயல்பட்டால் அதில் வெற்றி பெற முடியாது. கஷ்டபட்டு செய்தால் எதையும் வெற்றி பெற முடியும் என்று நம்பி செயல்பட்டால் எல்லாம் நன்மையும் உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் வெற்றியும் நன்மையும் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட எண்கள்:
6, 8, 9.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஜனவரி, பிப்ரவரி, ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, ஓரஞ்சு.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளிலும் ஞாயிறுகளிலும் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர செய்யும் தொழிலும், உத்தியோகத்திலும் இன்னல்கள் தீர்ந்து நன்மை கிடைக்கும்.