2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

ஆற்றலும், எழுச்சியும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்கேளே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை அட்டம ராகு வரும் 26-04-2025 முதல் ஏழாமிடத்தில் வந்து அமருவது கூட்டு தொழில் சிறப்பு. கேது தனஸ்தானத்திலிருந்து ராசிக்கு வருவது செயல்பாடுகள் ஸ்திரபடும்.
 
இனி ராசியில் கேது அமர்வது உழைப்பால் முன்னேற்றம் அடையும் வாய்ப்பு அமையும். நினைவாற்றல் குறையும். தன் உடலை கவனித்து கொள்ளும் சூழ்நிலை அமையும். எந்த காரியமும் செயல்படும் முன்பே யோசித்து செயல்படுவதும். செயல்பட்ட பின்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்ளும் பாக்கியமும் கிடைக்கும். நிறுவனத்தை வழிநடத்தி வருபவருக்கு துணிச்சலுடன் செயல்படும் மன உறுதி உண்டாகும். நாளைய திட்டம் எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவது இன்னும் சிறப்பாக அமையும்.
 
களத்திர ஸ்தானத்தில் ராகு வெளிபடை தன்மையை உருவாக்குவர். யாருடனும் கூட்டு சேர்வதற்கு முன்பு எப்படி அதை செயல்படுத்துவது திட்டமிட்டபடி செயல்படுவது போன்ற வலிமையுடன் செயல்படுவது சனியுடன் இணைவதால் சுறுசுறுப்பான செயல்களை ஊக்கபடுத்துவார்கள். மனதில் பட்டதை செயல்படுத்தும் உத்வேகத்தை உருவாக்கி கொள்வீர்கள். வெளிநாடு பயணம் வெளிநாட்டு தொடர்புகள் சிறப்பாக அமையும். கடந்த கால தோய்வு நிலை மாறி வெற்றியை நோக்கிய பயணம் இருக்கும். குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் எண்ணம் விரைவாக அமையும். பொருளாதார நிலை மேன்மை அமையும்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமை விநாயகர் வழிபாடும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தொடர்ந்து நற்பலன்கள் அமைய பெற்று பொருளாதார வளம் பெறுவீர்கள்.