2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

தனக்கென்று கொள்கைகளை வகுத்து செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு வரும் 26-04-2025 முதல் மாலை 04.20 மணிக்கு கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் அமர்கிறார்கள்.
 
உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுகஸ்தானத்தில் கேவும் அமர்ந்து உங்களின் செயல்களை செயல்படுத்துகிறார்கள். ராகு தொழில் ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்தையும் பார்ப்பதும் நான்காமிடத்தையும், எட்டாமிடத்தையும் பார்வை இடுவது உங்களின் தொழிலில் புதிய திருப்பங்கள் உண்டாகும். எதை செயல்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களோ! அதனை குரு பெயர்ச்சிக்கு தொடங்கினால்.. பின்பு நல்ல தொழில் வாய்ப்பு அமையும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு வேலை தேடுபவருக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.
 
இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த கேது சுகஸ்தானத்தில் வருவது உடல்நல குறைபாடுகள். வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. புதிய வாகனம், காரியம் சிறப்பாக அமையும். பிறந்த ஜாதகத்தில் கேது நிலையை பொறுத்து சிலருக்கு உயர் பதவியும் சிறந்த பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் கவனமுடன் இருப்பதுடன் அடிக்கடி தெய்வ வழிபாடுகள் செய்வது நல்லது. தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமை, ஞாயிறுகிழமைகளில் பள்ளிக்கொண்ட பெருமாள் தரிசனம் அடிக்கடி செய்து வருவதும் வெள்ளிக்கிழமைகளில் மகாலெட்சுமிக்கு நெய் தீபமிட்டு வருவதும் நற்பலனை பெற்று தரும்.