2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - மீனம்

பணிவும், இரக்க குணமும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு வரும் 26-04-2025 முதல் ஜென்ம ராகு விரையத்திலும், களத்திர கேது ஆறாமிடத்திலும் அமர்ந்து உங்களின் செயல்களை மேன்மைபடுத்தி வருவார்கள்.
ஆறாமிடமான ரணரோக சத்ருஸ்தானத்தில் கேது அமர்வது உங்களுக்கு உஷ்ணம் சம்மந்தமான உடல் உபாதைகளை தருவதுடன் புதிய கடன் பெற்று பழைய கடன்களை நீக்குவீர்கள். எந்த முடிவும் நிரந்தரமான தீர்வாக இருக்க வேண்டுமென்று நினைத்து அதற்கு தகுந்தபடி செயல்படுவீர்கள். காலத்தையும், சூழ்நிலையும் அறிந்து அதற்கு தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். எதை சாதிக்க நினைத்தீர்களோ... யாரை எதிரியாகவும் தொல்லை என்று நினைத்தீர்களோ... அவர்களே உங்களுக்கு உதவி செய்யும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் யாரையும் எதிரியாக கருதாமல் நட்பு கொண்டு செயல்படுவது நல்லது.
விரைய ஸ்தானத்தில் ராகு சனியுடன் சேர்ந்து அமர்வது தேவையற்ற செலவீனங்களை குறைத்துக் கொண்டு வளம் பெறுவீர்கள். யாருக்கு எதையும் கொடுக்கும் முன்பு யோசித்து செயல்படுவீர்கள். குலதெய்வ வழிபாடு மூலம் உங்களின் செயல்களை மேன்மைப்படுத்திக் கொள்வீர்கள். வெளிநாடு தொடர்புகளை விருத்தி செய்து கொள்வீர்கள். நல்ல காலத்தையும், நேரத்தை பயன்படுத்தி கொள்வதுடன் தொழில் சார்ந்த வெளியூர் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். இதுவரையுடன் உங்களுக்கு யார் இடையூறாக இருந்தார்களோ... அவர்கள் உங்களின் வழியில் வராமல் ஒதுங்கி கொள்வார்கள். குரு பெயர்ச்சிக்கு பின் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் வழிபாடு... முடியாதவர் சுலோகத்தை சொல்லி விளக்கு ஏற்றி வணங்கி வேண்டிக்கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றியையும், மனஅமைதியும் தரும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554