ரெய்கி பாகம் - 1

ரெய்கி பாகம் - 1

உலகில் எதை எதையோ அதிசயங்கள் என்று சொல்லி உள்ளார்கள். விஞ்ஞானிகளும் அணுசக்தி, மின்சக்திகளைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் இவற்றையெல்லாம் விட மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகா சக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகாசக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்த சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் மாபெரும் சக்தி தான். இதையே சுவாமி விவேகானந்தரும் உன்னிடம் எல்லா ஆற்றல்களும் குடி கொண்டிருக்கின்றன என்றார். இந்த ஆற்றலைத் தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே காந்த சக்தி படைத்தவர்களாக இருந்து வெற்றியை அடைகிறார்கள். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தான் அடைய முடியும். மனதின் எல்லையற்ற ஆற்றல்களைத் தெரிந்து அதைச் செயலாற்ற எவ்வளவோ பயிற்சி முறைகள் உள்ளன. அதிலே ரெய்கி பயிற்சி மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம். நமது இருபெரும் காவியங்களில் கதையோடு நிறையக் கிளைக் கதைகள் புகுத்தி அதன் மூலமாக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவ விளக்கத்தை அதாவது உட்கருத்தை வைத்துப் படைத்தார்கள். அது போல நானும் ரெய்கியோடு பல கருத்துகளையும் நல்விஷயங்களையும் வைக்கிறேன். வாழ்க்கையை நெறிப்படுத்திச் செம்மையாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

நம் பெரியோர்கள் மனிதனை எப்படியெல்லாம் உவமைப்படுத்தி உள்ளார்கள் என்று பார்க்கலாம். திருமூலர் `உடம்போ ஆலயம், உள்ளமே பெருங்கோயில் வாய் கோபுர வாசல்' என்றார். ஔவைப் பிராட்டியாரும் `அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்' என்று எவ்வளவு உயர்வுபடுத்தி உள்ளார்.

"அஹம் பிரமாஸ்மி :" உள்ளே பிரம்மாய் இருக்கிறேன்.
"எனக்குள் கடவுள் இருக்கிறார்."
"த்த்வமஸி" (நீயும் நானும் ஒன்றே)
"த்வம் ஏவ ஸர்வம்" (எல்லாம் ஒன்றே)
"நா சச்சிதானந்த ஸ்வரூபம்" (எனக்குள் எல்லாம் அடக்கம்)
"நான் ஒரு ஆத்மா" - என்று வடமொழி நூல்கள், மனிதனை உயர்வாகக் கூறிப்போற்றியுள்ளன.

ஆத்மாவானது பல பிறவிகளில் இருந்து மாறி, மனித ஆத்மாவாக பூமியில் வருவதே உயர்ந்த பிறவியாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதன் மாறுபட்ட அமைப்பு உடையவன். ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை, அனைவரிடத்திலும் இறைவன்குடி கொண்டிருக்கின்றான். அதனால் தான் பெரியோர்களும் மனிதனும் கடவுளாகலாம் என்றுச் சொல்லி உள்ளார்கள். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும், கடவுள் குடி கொண்டிருப்பதால் "ஒவ்வொருவரும் கடவுள் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்", என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கும்போது தான் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும். அதாவது தூய்மையான எண்ணங்களையே எண்ணுவது, நல்ல செயல்களையே செய்வது, போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதையே இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளாவன, இயமம், நியமம், பிராணாயாமம், ஆசனம் 

(யோகா) பிரத்யாஹாரம், தாரண, தியானம், சாந்தி போன்றவைகளாகும் இவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

இயமம்: தீயவைகளை விட்டொழித்தல், மனதைக் கட்டுக்குள் வைத்தல் இவற்றையே செய்ய வேண்டும். கொலை, களவு, திருட்டு, கடுஞ்சொல் கூறுதல், புறங்கூறுதல், பிற உயிர்களைத் துன்புறுத்தல் இவையெல்லாம் செய்யாமலிருத்தல் வேண்டும். அதாவது எப்பொழுதும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் செயல்பட வேண்டும்.

நியமம்: நல்லவைகளையே தேடித் தேடிச் செய்தல், (கிரியை என்றும் சொல்லலாம்), உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், உண்மையே பேசுதல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், புலன்களை அடக்குதல், திருப்தி அடைதல் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தல், ஆன்மிகச் சம்பந்தப்பட்ட நூல்களை படித்தல்.

ஆசனம்: உடம்பைப் பல நிலைகளில் வளைத்துப் பயிற்சி செய்தல், இவ்வுலகிலே யோகா செய்பவர்களை வானுலகில் தேவர்கள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வரவேற்று காத்து நிற்பர் என்று மிகைப்படுத்தி உள்ளார்கள்.

பிரணாயாமம்: உயிர்மூச்சை ஒழுங்காக நடத்துதல், மூச்சு சம்பந்தமான பயிற்சி.

பிரத்யாஹாரம்: வேண்டாத காரியங்களைத் தவிர்த்து, வேண்டிய காரியங்களைத் தெரிந்து கொள்வது, மனதைப் பிறபொருளிடம் சொல்லாது நிறுத்துதல்.

தாரணை: மனைதை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துதல்.

தியானம்: மனதை ஒரே நிலையில் நிற்கச் செய்தல்.

சாந்தி: அமைதியான உறக்க நிலை என்று சொல்லலாம்.

இந்த எட்டு நிலைகளையும் நாம் கடைப் பிடித்தோமானால் வாழ்க்கை சுபிட்சமாகவும் சீராகவும் போகும் மேலும் இதன் உட்கருத்து என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தீயவைகளை விட்டொழித்து நல்லவைகளையே செய்து மனதை ஒருமுகப்படுத்தித் தியானத்திலே உட்காரும் போது தான், சூழ்நிலையில் என்ன நினைக்கிறானோ  அது அவர்களுக்குக் கைகூடும் என்பது சூட்சுமமான உண்மையாகும். இப்படி ஒவ்வொருவரும் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட ரெய்கியின் உள்ளே செல்லும் போது மிகவும் அற்புதமாக வேலை செய்யும் என்று சொல்லாம். நாம் இப்போது 1. ரெய்கி என்றால் என்ன? 2. அதன் முழு அர்த்தம் என்ன? 3. அதன் வரலாறு என்ன? 4. ரெய்கி எங்கிருந்து போய் எப்படி வந்தது? 5. ஒவ்வொருவருக்கும் அந்த சக்தி எப்படிக் கிடைக்கிறது. 6. அந்தச் சக்தியை எப்படி இயங்க வைப்பது. 7. தனக்கு தானே எப்படிச் சிகிச்சை செய்து கொள்வது. 8. அடுத்தவர்களுக்கும் எப்படிச் சிகிச்சை அளிப்பது. 9. கணவன் மனைவி அன்பை அதிகரிக்கச் செய்வது. 10. தொலை தூரச் சிகிச்சையின் சிறப்பம்சங்கள். 11. பாதுகாப்பு கவசம். 12. இடம், அலுவலகம், தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவது இதுபோன்ற பல சிறப்பம்சங்களும், அதோடு கூட எனக்குள் ரெய்கி அனுபவங்களும், மற்றவர்களுக்கு, ரெய்கி கொடுத்ததால் ஏற்பட்ட அனுபவங்களும், ரெய்கி படித்தவர்களுடைய அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் - பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். வெளியே இருப்பது உள்ளேயும் இருக்கிறது, உள்ளே இருப்பதே வெளியேயும் இருக்கிறது.

பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத எண்ணிடலங்காச் சக்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவைகள் நம் கண்ணுக்குப் புலப்படாது. நம்மால் பார்க்க முடியாது என்பதற்காக அவைகள் இல்லையென்று ஆகிவிடாது. அதேபோல பிரபஞ்சத்தில் என்னென்ன சக்திகள் இருக்கிறதோ அவைகளெல்லாம் மனிதனுக்குள்ளேயும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் பஞ்சபூத சக்திகள், நவகிரகங்களின் தொடர்பு, சூரிய நாடி, சந்திர நாடி இன்னும் பல சக்திகள் உள்ளன. எப்போதும் ஒரு சக்தி தனித்து இயங்காது. ஒரு சக்தியோடு மற்றொரு சக்தியை இணைக்கும் போது அந்த சக்தி இயங்க ஆரம்பிக்கும் அதாவது பிரபஞ்ச சக்தியை  மனித சக்தியோடு இணைக்கும் போது ரெய்கி சக்தி கிடைக்கும். குரு மூலமாகத்தான் தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரெய்கி - இயற்கை பிரபஞ்ச காந்த சக்தி என்பதாகும்

ரெய்கி  இயற்கை பிரபஞ்சம்

கி   இறைசக்தி (காந்த சக்தி)

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே 18 சித்தர்கள் மகான்கள், அவதார புருஷர்கள் இவர்களெல்லாம் நிறைய அதிசயங்களும் அற்புதங்களும் செய்து மறைந்தார்கள். விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் எல்லாவற்றையும் அவர்கள் அன்றே ஞானதிருஷ்டியில் தெரிந்து பார்த்து சிலவற்றை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள். ஆனால் அவைகள் சரியான முறையில் பயன்படுத்தாதலாலும், பல உள்ளர்த்தங்கள் கூடியதாக இருந்ததாலும், மேலும் அவைகளில் சில மண்ணோடு மண்ணாகிப் போனதாலும் தான், இந்தியா பின் தங்கி இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்திருக்கும் எனவும் சொல்லி உள்ளார்கள். இந்தியாவிலிருந்து (அணஞிடிஞுணணா டஞுச்டூடிணஞ்) தான் இந்த முறைகளெல்லாம் ஜப்பானுக்கு போய் அங்கிருந்து

ரெய்கி என்ற பெயரோடு வந்து உள்ளது.

ஒரு சில சித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
1. இராமலிங்க வள்ளலார் நீரிலே விளக்கேற்றியவர். அவர் ஏற்றிய ஜோதியும் அணையாத அடுப்பும் இன்றளவும் பிரசித்தி பெற்றது. அவர் ஜோதிமயமாகவே மறைந்தவர்.
2. திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்ததாகவும், 3000 பாடல்கள் எழுதியதாகவும் வரலாறு.
3. சீரடி சாய்பாபாவும் நிறைய அற்புதங்கள் செய்தவர்.
4. போகர் என்ற சித்தர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, மூலிகைகளால் பழநி முருகனை அமைத்தவர்.
5. மூலிகைகளைக் கண்டுபிடித்து, அதை மருத்துவ ரீதியாகக் கொடுத்ததும் சித்தர்கள் தான். இவர்கள் எல்லாம் உலக மக்களுக்கு நன்மை செய்தார்கள்.

நாமெல்லாம் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் கூட நமக்கு நாமே நல்லவர்களாகவும் குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்காவது நல்லது செய்து ஆரோக்கியமாக இருக்கலாமே. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனிதர்களிலே மூன்று நிலைகளில் இருப்பவர்கள் உள்ளார்கள். விலங்குநிலை - மனிதநிலை - தெய்வநிலை.

விலங்குநிலை: தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுப்பது.

மனித நிலை: தன்னைப்பற்றி மட்டும் நினைத்து, பிறரைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பது.

தெய்வநிலை: தானும் நன்றாக வாழ்ந்து, பிறரும் நன்றாக வாழ்வதற்குண்டான உதவிகள் செய்து, உலக மக்களுக்கும் நன்மை செய்து வாழ்பவர்கள் தெய்வநிலைக்கு ஒப்பானவர்கள்.

தெய்வ நிலையில் இல்லாவிட்டாலும் கூட, விலங்கு நிலைக்கு போகாமலும் குறைந்த பட்சம்  மனித நிலையில் இருந்தால் கூட வீடும் நாடும் ஓரளவுக்குச் சுபிட்சமாக இருக்கும்.

மக்கள் நிறைய நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் சோம்பலும், அறியாமையும் ஆகும்.

சோம்பல் அறியாமை புகுந்த கூட்டில்.

யாரும் அறியாமல் ஊறுமே நோய்

நல்ல விஷயங்களை நிறைய பேர் ஏற்றுக்கொள்ள முன்வராததே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

ரெய்கி வரலாறு பற்றிக் காண்போம்: `ஈணூ. மிகாவ் உசுயி' என்பவர் ரெய்கி குரு ஆவார். இவர் திபெத்திய ஞானி, இவர் காலையில் பைபிள் வாசிப்பார். பகல் நேரத்தில் கல்லூரியில் வேலை செய்வார். மாலையில் மக்களுக்கு மருந்து மாத்திரை கொடுப்பார். இந்நேரத்தில் அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் கேள்வி விடுக்கிறார்கள். 

காலை பைபிள் படித்துவிட்டு மாலை ஏன் மருந்து கொடுக்கிறீர்கள். பைபிளில் ஏசுகிறிஸ்து தொடுதல் சிகிச்சை முறை மூலமாக பலநோய்களைக் குணமாக்கியுள்ளாரே அவரைப் போல நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்று கேட்டார்கள். அவர் உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டுத் தொடுதல் சிகிச்சை முறைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் 21 வருடங்கள் ஆராய்ச்சி நடந்தது. ஆனாலும் விடை கிடைக்கவில்லை. ஒரு புத்தபிட்சு இந்தியாவிற்குப் போய்ப் பாருங்கள். உங்கள் ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கும் என்று கூறினார். அவர் இந்திய வந்து சமஸ்கிருத மொழி பயின்று நிறைய ஓலைச்சுவடிகளைப் படித்தார். அதில் புத்தருடைய சுவடுகளில் அவருக்கு விடை கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு அவர்கள் ஜப்பான் சென்றார்கள். 

பிறகு அவர் அங்கு `சூரியோமா' என்னும் மலையில் "ஓதூணிணாச்" என்னுமிடத்தில் 2 நாள் தியானத்தில் அமர்ந்தார். 21 நாள் முடியும் கடைசி நேரத்தில் ஆகாயத்திலிருந்து இடி மின்னலுடன் கூடிய சக்தி மிகுந்த பேரொளி அவரை நோக்கி வந்தது. அந்த சக்தியானது அவரது  மூன்றாம் கண் (புருவ மத்தி) என்னுமிடத்திற்குச் சென்றது. அப்பொழுது அவரது உடல் சுருங்கி உள்ளம் விரிவடைவதை அவர் உணர்ந்தார். அவருக்கு அப்பொழுது புத்துணர்ச்சியும் கிடைத்தது. பிறகு கண்ணைத் திறந்து பார்க்கையில் வானத்தில் வானவில் நிறங்களைப் பார்த்தார். அதன் உள்ளே ரெய்கி மந்திரங்களைக் காட்சியாகப் பார்த்தார். அப்பொழுது அவருக்கு அசரீ ஒலியும் கிடைத்தது. 

பிறகு என்ன நடந்திருக்குமென அடுத்த இதழில் பார்க்கலாம்.