புனித நகரமாய் போற்றப்படும் வாரணாசி!

புனித நகரமாய் போற்றப்படும் வாரணாசி!

இந்து மதத்தின் தலைமைப் பீடமாகக் கருதப்படுவது வாரணாசி. இது பழமையானதும் எல்லோராலும் போற்றப்படுவதுமான நகரம். மகோன்னதமான நகரம். மகோன்னதமான இந்நகரம் யாத்ரிகர்கள் விரும்பி அடையும் தலம். தவிர அவர்களது மத நம்பிக்கையின் மைய அணுவாகவும் திகழ்கிறது. இந்திய நாட்டின் மூலை, முடுக்குகள் மட்டுமல்லாது உலகின் எல்லா இடங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் ஆயிரக்கணக்கில் இங்கு கூடுகின்றனர். பழங்காலம், நிகழ்காலம் தவிர அழிவற்றது. தொடர்ந்து வருவது ஆகிய எல்லாமே இந்த நகரத்தில் அருகருகே காணப்படுகின்றன.
 
இந்திய ஆறுகளில் மிகவும் புனிதமான கங்கையின் பிறை சந்திரனைப் போன்ற வடக்குக் கரையில் எழில் மிகும் நகரமான வாரணாசி அமைந்துள்ளது. இந்தப் புனித ஆற்றுக்கும் இந்தப் புனிதத் தலத்துக்கும் இடையேயுள்ள சிறப்பான உறவு இந்த அருமையான வாரணாசி நகரத்தின் சாரமாகும். சுவர்க்கத்திலிருந்து கீழே இறங்கியுள்ள இந்தப் புனித கங்கை, இங்குள்ள மக்களின் பாவங்களைக் கழுவுவதை தன் முக்கிய பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. வாரணாசியில் தங்குவது என்பது உலகிற்கு புறத்தே உள்ள ஓர் இனிய அனுபவம். ஒவ்வொருவரும் தம்மைப் புரிந்து கொள்வதான ஓர் அனுபவம், அழிவற்ற நிலையை அடைவதற்காக நிகழ்காலம், இறந்த காலம் ஆகியவற்றினூடே செல்லும் ஓர் இனிமையான பயணம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
 
இந்தியாவின் பழமையான கல்வி மையமான வாரணாசி, அங்கு பாயும் இரு ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது. நகருக்கு வடக்கில் வருணா ஆறும். தெற்கில் அசியும் பாய்கின்றன. அதனால் இந்நகரம் வாரணாசி என்று பெயர் பெற்றது. இடைக்காலத்தில் இதன் பெயர் “பெனராஸ்” என்று திரிந்து போயிற்று. அதன் பெயரை வாரணாசி என்று 1956, மே 24-ல் இந்திய அரசாங்கம் மாற்றி அமைக்க ஓர் ஆணை பிறப்பித்தது. மிகப் பழமையான இந்நகரம் இப்போமு் புதுப் பொலிவோடு கல்வி, மதம் ஆகிய துறைகளுக்கு முக்கிய கேந்திரமாகச் செயல்படுகிறது.
 
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. வாமண புராணம், புத்தமத நூல்கள், மகாபாரதம், இராமாயாணம் பொன்றவற்றிலும் வாரணாசி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
 
இந்த நகரத்தின் வாழ்க்கையும் அதன் செயல்பாடுகளும் இந்தப் புனித ஆற்றை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. சூரிய உதிக்கும் முன்பு விடியலிலேயே கங்கைக் கரையில் ஒவ்வொரு நாளின் செயல்பாடும் தொடங்குகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆண், பெண் குழந்தைகள் கும்பலாகவும் தனியாகவும் பாவத்தையும் சராசரித் துயரங்களையும் போக்கிக் கொள்ள இப்புனித நதியில் நீராடும்  தருணத்திற்காகக் காத்தக் கொண்டிருக்கின்றனர். சிறிது சிறிதாக சூரியன் உதயமாகிறான். இருகரையிலும் காணப்படும் பல பாணிகளில் கட்டப்பட்ஃட மகோன்னதமான கட்டடங்கள் கண்களுக்குப் புலனாகின்றன.
 
சூரியன் உதயமானவுடன் நகரின் மைய அரங்குகளான நீராடும் படித்துறைகளில் மனித இயக்கம் சுறுசுறுப்பாக தொடங்குகின்றன. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அந்தச் சூழலில் “பண்டாக்கள்” என்றழைக்கப்படும் அந்தணர்கள் புனித நூல்களைப் பாராயணம் செய்கின்றனர். பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. படகுக்காரர்கள், பூ விற்பவர், இனிப்பு விற்பவர் கூவிக்கூவி பல பொருள்களையும் விற்பவர்களுடன் எருதுகளும் பசுக்களும் இங்கும் அங்கும் அலைந்து திரிவதை காணலாம்.
 
வாழ்க்கையைப் பற்றி சநிதனை செய்யவம், படைப்பைப் பற்றி எண்ணவும், இறப்பின் முன் உலகாயதப் பொருட்களின் சிறுமையைப் பற்றி நினைக்கவும் ஒவ்வொருவரையும் வாரணாசி தூண்டப்படுகிறது.
 
பயணிகள் முறைப்படியாக நீராட இப்படித்துறைகளை நோக்கிச் செல்கின்றனர். உதிக்கும் சூரியனுக்குப் பூசை செய்கின்றனர். இவையெல்லாம் ஆண்டாண்டு காலமாக நடைபெறுகின்றன. தசாஸ்வமேதகாட் (படித்துறை)டிலிருந்து நதியின் அழகை முழுமையாகப் பார்க்கலாம் பத்து குதிரைகள் தியாகம் செய்யப்பட்ட இடம். புராணக்கதைப்படி நாடுகடத்தப்பட்ட காலம் முடிந்து திரும்பிய சிவபெருமானுக்கு வழிவகுப்பதற்காகப் பிரம்மதேவன் இந்த யாகத்தைச் செய்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.  இந்த இடம் சிறிதும் மாற்றமடையாமல் கொடுக்கப்படாமல் காலம் காலமாக அப்படியே உள்ளது. மற்ற முக்கிய படித்துறைகள் அஸி, வர்ண சங்கம், பஞ்ச கங்கை, மணிகர்கணிகா, ஹரிச்சதந்திர காட் ஆகியவை. இவற்றுள் மணிகர்கணிகா மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவியுடன் இந்தப் படித்துறை தொடர்புடையது. ஹரிச்சந்திரா காட்டின் அருகில் மயானம் உள்ளது. பாதி எரிந்த நிலையிலுள்ள பிணங்கள் அப்படியே கங்கை நீரில் இழுத்து விடப்படுகின்றன. ஆனால் படித்துறைக்குக் கீழ் படித்துறையில் நீராடுபவர்களுக்கு ஒரு போதும் பிணங்கள் தட்டுப்படுவதில்லை என்பது சுவாரசியமான விபரம். காசியில் இற்பபவர்கள் நேராக மோக்ஷத்தை அடைகிறார்கள் என்பது நம்பிக்கை.
 
- டொக்டர் லக்ஷ்மி விஸ்வநாதன்