ஸ்ரீ ராமபிரான் 108 போற்றிகள்!

ஸ்ரீ ராமபிரான் 108 போற்றிகள்!

ஓம் அயோத்திக்கு அரசே போற்றி

ஓம் அருந்தவத்தின் பயனே போற்றி
ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
ஓம் அலவிலா விளையாட்டுடையாய் போற்றி
ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
ஓம் அறத்தின் நாயகனே போற்றி
ஓம் அன்பர் தம் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
ஓம் அளவிலா ஆற்றல் படைத்தோய் போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் அரிசினம் அகற்றினாய் போற்றி
ஓம் அகலிகை சாபம் தீர்த்தோய் போற்றி
ஓம் அன்பர் அகமகிழும் அற்புத நாமா போற்றி
ஓம் அஞ்ஞான இருள்அகற்றும் அறிவுச்சுடரே போற்றி
ஓம்அளவோடு பேசும் குணநிதியே போற்றி
ஓம் அன்பிலே விளைந்த ஆரமுதே போற்றி
ஓம் அரக்கர்க்குக் கூற்றே போற்றி
ஓம் அனுமன் நினைவகலா தாரக நாமனே போற்றி
ஓம் அங்கதனிடம் அன்பு கொண்டோய் போற்றி
ஓம் அனந்த கல்யாண குணலயா போற்றி
ஓம் அசுவமேத யாக பிரபுவே போற்றி
ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
ஓம் ஆண்டகையே போற்றி
ஓம் ஆதரவற்றோர்க்கு ஒரு புகலிடமே போற்றி
ஓம் ஆத்ம - ஞான ஜனகன் திருமகளை மணந்தோய் போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் இகல் வெல்லும் இளையவன் அண்ணலே போற்றி
ஓம் இராமநாதனைப் பூஜித்த ஸேதுராமா போற்றி
ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
ஓம் உண்மைக்கோர் உருவமே போற்றி
ஓம் உரக சயனா போற்றி
ஓம் உலகம் காக்கும் உத்தமா போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் எழில் நாயகனே போற்றி
ஓம் ஏறுநடையுடை ஏந்தலே போற்றி
ஓம் ஏழு மராமரங்களைத் துளைத்தவனே போற்றி
ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
ஓம் அளஷத நாம ஸ்வரூபனே போற்றி
ஓம் கவியரசின் உயிர்த் துணைவா போற்றி
ஓம் கபந்தனுக்கு முக்தி கொடுத்தோய் போற்றி
ஓம் கரனை ஒழித்தோய் போற்றி
ஓம் காமகோடி ரூபனே போற்றி
ஓம் காமம் அழிப்பவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காலம் எல்லாம் நிலைத்து நிற்கும் கருப்பொருளே போற்றி
ஓம் காசி முக்திக்குக் காரண நாமா போற்றி
ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
ஓம் கோசலை மைந்தா போற்றி
ஓம் கோதண்ட பாணியே போற்றி
ஓம் சங்கடம தீர்க்கும் ஸத்குருவே போற்றி
ஓம் சத்யவாக்கு சத்ய விக்ரமனே போற்றி
ஓம் சரணாகத வத்ஸலா போற்றி
ஓம் சபரிக்கு மோஷம் கொடுத்தாய் போற்றி
ஓம் சோக நாசனா போற்றி
ஓம் சோலைத் திருமலை அழகனே போற்றி
ஓம் சௌபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தாய் தந்தை சொல் வேதமெனக் கொண்டோய் போற்றி
ஓம் தியாகப்பரப்பிரம்மம் தொழும் கானமூர்த்தியே போற்றி
ஓம் நிலைமானவனே போற்றி
ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
ஓம் நீல மேக சியாமளனே போற்றி
ஓம் பரசுராமன் கர்வம் அடக்கினாய் போற்றி
ஓம் பட்டமரம் தளிர்க்க வைக்கும் பாவனநாமா போற்றி
ஓம் பத்துத்தலை தத்தக் கணைதொடுக்கும் பரம்பொருளே போற்றி
ஓம் பண்டரிநாத விட்டலா போற்றி
ஓம் பரத்வாஜ முனிவர் தொழும் பாதனே போற்றி
ஓம் பங்கஜ லோசனா போற்றி
ஓம் பரிமள வாசனா போற்றி
ஓம் பாதுகா பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
ஓம் பிறவிப் பெருங்கடல் புணையாவாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
ஓம் மாதவமுனிவர்தாள் தேடி வணங்குவாய் போற்றி
ஓம் மாமிருள் ஞாலம் மறுவின்றி விளக்குவாய் போற்றி
ஓம் மாதேவன் சந்ததம் சிந்திக்கும் தர்ரகநாமா போற்றி
ஓம் மாய மாரீசனை மாய்த்தோய் போற்றி 
ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
ஓம் மூவிரு முகன் செல்வ மாமனே போற்றி
ஓம் ரகு வம்சத்தை நிலை நிறுத்தியவனே போற்றி
ஓம் லவகுசர்களின் அன்புத் தந்தையே போற்றி
ஓம் வசிஷ்ட முனிவரால் முடிசூட்டப் பெற்றாய் போற்றி
ஓம் வாயுகுமாரனின் மனநிறைவே போற்றி
ஓம் வானரர் தொழுது ஏத்தும் வள்ளலே போற்றி
ஓம் விராதனை வதம் செய்தாய் போற்றி
ஓம் விஷயங்களைக் கடந்தவனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பு அற்றவனே போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் விசுவாமித்திரன் வேள்வி காத்தோய் போற்றி
ஒம் வீடணுக்கு அபயமும், அரசும் அளித்தாய் போற்றி
ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
ஓம் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈவாய் போற்றி
ஓம் வேடன்குகனொடும் ஐவரானாய் போற்றி
ஓம் வேத முதல்வா போற்றி
ஓம் வேந்தர்க்கு வேந்தனே போற்றி
ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி 
ஓம் வேதங்கள் தேடும் பாதனே போற்றி
ஓம் வேதாந்த சாரமே போற்றி
ஒம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் வைதேஹி மணாளா போற்றி
ஓம் வைனவதேய பிரபுவே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்ந்த்ர மூர்த்தியே போற்றி