கண் திருஷ்டியும் பரிகாரங்களும்

கண் திருஷ்டியும் பரிகாரங்களும்

நம் இல்லத்துக்கு வரும் சிலரின் பொறாமை கண்ணோட்டம், பொறாமை மனதுடன் பார்க்கும் பார்வையால் ஏற்படும் பாதிப்புக்குக் கண் திருஷ்டி என்று பெயர், தோசங்களில் கண் திருஷ்டியும் ஒரு தோசம் தான்.
 
புராண இதிகாசங்களில் கண் திருஷ்டிக்குக் கூறப்பட்ட எளிய பரிகாரங்கள்:
 
1. தொழிலில் ஏற்படும் கண் திருஷ்டிக்கு தேங்காயை சுற்றி சூரைத் தேங்காய் உடைத்தல்.
 
2. கடன் தொல்லைகளுக்கு விநாயகர் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் தேங்காய் எண்ணெய், நெய் கலந்து தீபம் ஏற்றல்.
 
3. நமக்குத் தெரியாமல் வீட்டிற்குப் பாதிப்பு தரும் கண் திருஷ்டிக்கு வீட்டு வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தல்.
 
4. வீட்டு தோச கண் திருஷ்டிக்கு சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி தாமரைப் பூ வைத்து அத்துடன் எலுமிச்சை பழத்தைப் போட்டு வரவேற்பறையின் மத்தியில் வைத்தல்.
 
5. வீட்டில் அதிக தோசம் கண் திருஷ்டி இருந்து அதனால் உடல் நலம் பலவீனத்திற்கு கல் உப்பை நீரில் கரைத்து வீட்டை கழுவி துடைத்து விடல்.
 
6. வீட்டில் மாலை நேரத்தில் விளக்குத் திரியை சரி செய்து தீபம் ஏற்றுதல். அந்த விளக்கின் ஒளியை சிறிது நேரம் பார்க்க கண் திருஷ்டி நீங்கும்.
 
7. திருஷ்டியால் ஏற்படும் தீராத உடல் உபாதைகளுக்கு கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது.
 
8. வீட்டில் கணபதி ஹோமம் செய்தயாக சாம்பலை ஒருபிடி எடுத்து, வெள்ளைத் துணியில் கட்டி வாசலில் தொங்க விட திருஷ்டி செய்வினைப் பாதிப்பு நீங்கும்.
 
9. இல்லத்துக்கு யார் வந்தாலும் முதலில் நீர் அருந்துமாறு கொடுக்க, வந்தவர் மனநிலை, எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் நம் இல்லத்தைப் பாதிக்காது.
 
10. குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டிக்கு குழந்தையின் நெற்றியின் இடது புறமும் கன்னத்திலும் கருப்பு மையல் பொட்டு வைக்க திருஷ்டி ஏற்படாது.
 
11. பொறாமைக்காரர் வருகையால் இல்லத்திற்கு ஏற்படும் திருஷ்டி விலக, பச்சை கற்பூரத்தை நீரில் கலந்து வாசலில் தெளிக்க வேண்டும்.
 
12. ஆலயத்தில் வழங்கும் பிரசாதம் உண்பதால், நம் உடலைத் தாக்கும் திருஷ்டி அகலும்.
 
13. வீட்டில் அடுப்புக் கரியில் தணல் பற்ற வைக்கும் போது, அதில் தேங்காய் நார் போட்டு எரித்து, பின்பு சாம்பிராணி போட திருஷ்டி நெருங்காது.
 
14. சிவப்பு கயிற்றையும், கறுப்புக் கயிற்றையும் வலது கையில் கட்டினால் எந்த திருஷ்டி தோசமும் அண்டாது.
 
K.துரைராஜ்