நவக்கிரக சாந்தி பரிகாரத்தலங்கள்

 நவக்கிரக சாந்தி பரிகாரத்தலங்கள்

ஜயவருடம் மார்கழி மாதம் 1-ந்திகதி, (16.12.2014) செவ்வாய்க கிழமை பகல் 2.44க்கு சனீஸ்வர பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு விசாகம் 4-ம் பாதத்தில் பிரவேகித்துள்ளார். சனிப்பெயர்ச்சியின் பலன்களை பன்னிரு ராசிக்கும் உரியவர்கள் இதுகாறும் அறிந்திருப்பீர்கள். சனிப் பெயர்ச்சியைத் தொடர்ந்து பலரும் நவக்கிரக ஸ்தலங்களுக்குச் சென்று, தங்களுக்குச் செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்யத் திட்டமிட்டிருப்பார்கள். சோதிட கேசரி வாசகர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தைச் சுற்றிலும் உள்ள நவக்கிரகஸ்தலங்களைப் பற்றியதான வரைபடத்தை தொடர்புக்குரிய தொலைபேசி எண்களுடன் அளித்திருக்கின்றோம்.

இலங்கையிலிருந்து பரிகாரங்கள் செய்திட வருவோர், திருச்சி விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து சாலைவழியாக சுமார் மூன்று மணித்தியாலத்தில் கும்பகோணத்தை அடையலாம்.
 
நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் தேவஸ்தானம் தொலைபேசி எண்கள் விபரம்:
 
1. சூரியனார் கோவில் (சூரியன்) - 0435-2472349,
2. திங்களூர் (சந்திரன்) - 04362-262499,
3. வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்) - 04364-279423,
4. திருவெண்காடு (புதன்) - 04364-256424,
5. ஆலங்குடி (குரு) - 04374-269407, 5A. திட்டை (குரு) - 04362-252858,
6. கஞ்சனூர் (சுக்கிரன்) - 0435-2473737,
7. திருநள்ளாறு (சனி) - 04368-236530,
8. திருநாகேஸ்வரம் (ராகு) - 0435-2463354,
9. கீழப்பெரும்பள்ளம் (கேது) - 04364-275222