மீன ராசிக்கான பலன்கள்

மீன ராசிக்கான பலன்கள்

மீன ராசிக்கு 2017-ம் ஆண்டு நற்பலன்களை தருகின்ற ஆண்டாக இருக்கும். வருட ஆரம்பத்தில் ஏறத்தாழ செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வரை உங்கள் ராசிநாதன் ஏழாமிடத்தில் நிலை கொண்டு ராசியை பார்த்துக் கொண்டிருப்பது மிக சிறந்த அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சிறப்புகளை சேர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏறத்தாழ வருடம் முழுவதும் ராசிநாதன் ராசியை பார்ப்பதால் இந்த வருடத்தில் உங்களுக்கு அந்தஸ்து, கவுரவம் கூடும்படியான அமைப்புகள் இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நடக்கும். இளைய வயது காரர்களுக்கு அவரவர்கள் வயதுக்கேற்றப்படி படிப்பு, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும் வருடம் இது. நடுத்தர வயதுக்காரர்களை இதுவரை தொல்லைப் படுத்தி கொண்டு வந்த கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள், வழக்குகள் வருடத்தின் ஆரம்பத்திலேயே சாதகமான முடிவுக்கு வரும். ஆகஸ்ட் மாதம் 18 -ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேதுப்பெயர்ச்சி மூலம் ராகு ஐந்தாமிடத்திற்கும் கேது பதினொன்றாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள். பதினொன்றாமிடத்தில் சர்ப்பக்கிரகங்கள் இருப்பது எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தரும் என்பதால் ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய பொருளாதார உயர்வு மிகவும் நன்றாக இருக்கும். ராகு-கேதுக்கள் கடக, மகரத்தில் அமர்ந்து அந்த இடம் மூன்று பதினொன்றாக அமைந்தால் செல்வம் வரும் என்பது ஜோதிட விதி. இது பிறந்த ஜாதகத்திற்கும் கோட்சார அமைப்பிற்கும் பொருந்தும். அதன்படி வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருக்கும் இந்தப் பெயர்ச்சியின் மூலம் மறைமுகமான வழியில் உங்களுக்கு பண வரவும், தனலாபங்களும் இருக்கும். மகர கேதுவால் இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் இருக்கும். விரும்பிய தேசத்திற்குச் செல்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வெளி மாநிலம் மற்றும் தூரமான இடங்களில் பணி அமையும். இன்னும் சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவு இடங்களுக்கு போய் வாரா வாரம் திரும்புவது போன்ற வேலைகள் கிடைக்கும். செப்டம்பர் 12-ம் தேதியன்று ராசிநாதன் குருபகவான் ஏழாமிடத்தில் இருந்து எட்டிற்கு மாறுகிறார். இது சாதகமற்ற நிலை என்பது போலத் தோன்றினாலும் எப்போதும் உபயராசிகளுக்கு குருபகவான் மறைவிடத்தில் நன்மைகளை மட்டுமே செய்வார் எனும்படி நல்ல பலன்களை மட்டுமே குரு மாற்றம் செய்யும். அதே நேரத்தில் எட்டாமிடம் என்பதால் எதிலும் அலைய வைத்தே பணம் தருவார்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3