சாவி - கனவுகளும் பலன்களும்

சாவி - கனவுகளும் பலன்களும்

நீங்கள் ஒரு சாவியைக் கனவில் கண்டால் உங்களுக்குச் சில புதிய சொத்துகள் கிடைக்கும் அல்லது பொறுப்பு உள்ள ஒரு புதிய பதவி கிடைக்கும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உடையவராய் இருந்தால் அந்த ஆசை இனிதே நிறைவேறும். எனினும், இந்த நற்பலன்கள் எல்லாம் நடைபெற வேண்டுமானால், உங்களை நம்பி ஒப்படைக்கப்படும் இரகசியங்களை நீங்கள் வெளியே விடாமல் காப்பாற்ற கற்றுக் கொள்ள வேண்டும்.

 
நீங்கள் ஒரு சாவியைத் தொலைத்து விட்டது போல் கனவு கண்டால் ஒருவர் குற்றம் செய்து விட்டதாக நீங்கள் ஐயப்படுகிறீர்கள். ஆனால் அதை உறுதி செய்து கொள்வதற்கான சான்று உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் அது உங்களுக்குக் கிடைக்கப் போவது இல்லை. ஏனென்றால் நீங்கள் ஐயப்படுகிற அந்த நபர் உண்மையிலேயே குற்றவாளி அல்லர்.
 
நீங்கள் தொலைத்துவிட்ட ஒரு சாவியை மீண்டும் கண்டெடுப்பது போல் கனவு கண்டால் உங்களுடைய இரகசியமான ஆசை ஒன்று விரைவில் நிறைவேறக்கூடிய வாய்ப்பு வரப்போகிறது.
 
ஆனால், அது நிறைவேறுவதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படமாட்டாது. அது நிறைவேறாமல் இருக்கும் வரையில் தான் உங்களால் நிம்மதியாக வாழமுடியும். ஆகையால் அது நிறைவேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.
 
நீங்கள் ஒரு சாவித்துளை வழியாக உள்ளே பார்ப்பது போல் கனவு கண்டால் உங்களுக்குச் சிறிதும் தொடர்பு இல்லாத ஒர் இரகசியத்தை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகளை உங்களுக்குத் தெரியாமலே ஒருவர் கவனித்து வருகிறார். அந்த முயற்சிகளை உடனே விட்டு ஒழியுங்கள். இல்லாவிட்டால் வீணான பகைமைகளுக்கு ஆளாக நேரிடும். 
 
தமிழ்வாணன்