அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

எதை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் சொல்லும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானாதிபதியை பார்ப்பதால் உங்களின் எண்ணம் போல நல்ல வாழ்க்கை அமையும். சுபிட்சமான சூழ்நிலைகள் உருவாகும். குறைவின்றி வாழ உறுதியுடன் இருக்க உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
 
உங்களின் ராசியில் பாக்கியாதிபதி அமர்ந்து குரு பார்வை பெறுவது உங்களின்  வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார். கடந்த கால நிகழ்வுகள் போல் இல்லாமல் நினைத்தபடி சகல காரியமும் வெற்றியை தரும். யாருக்கும் கிடைக்காத பல நற்காரியங்களும் தற்செயலாக நடக்கும். பூர்வீக சொத்துகள் சார்ந்த சில வேலைகளை துவங்குவீர்கள். உங்களின் யோகாதிபதி சனியின் பார்வை ராசிநாதன் மீது படுவது அரசு சார்ந்த காரியங்களில் நல்ல அனுபவம் பெறுவீர்கள். சிலருக்கு அரசு சார்ந்த உத்தரவுகள் கிடைக்க பெறுவீர்கள்.
 
தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் உங்களின் முயற்சிகளுக்கு குரு பார்வையின் பலன்களால் இம்மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்க பெற்று, தொழில்களுக்கு வரும் காலத்தில் சுமூகமான சில காரியம் நடக்கும். உங்களின் கூட்டு முயற்சிகள் நல்ல பலனை பெற்று தரும். களத்திரகாரகன் ராசியில் அமர்வது சிலருக்கு திருமண யோகங்கள் அமையும். வீட்டில் சிறு பெண் பிள்ளை இருந்தால் பூப்படையும் வாய்ப்புகள் அமையும். காத்திருந்த காலம் மறைந்து, வெற்றி பாதையில் பயணிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, சனி, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
10-10-2025 வெள்ளி காலை 06.07 முதல் 12-10-2025 ஞாயிறு காலை 08.34 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை நரசிம்மர் வழிபாடும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடும் செய்து, நெய் தீபமேற்றி, தொடர்ந்து வழிபட்டு வர, உங்களின் தொழில் ,உத்தியோகம் சிறப்பாக அமையும்.