முனிவருக்கருளிய நரசிங்க பெருமாள்!

முனிவருக்கருளிய நரசிங்க பெருமாள்!

மூலவர் 6 அடி உயரமுள்ள யோக நரசிம்மர். தாயார் ஸ்ரீமகாலட்சும் நரசிங்க வல்லி. உற்சவர் நின்ற கோலத்தில் அபயகரத்துடன் காட்சி தருகிறார். ரோமச முனிவர் தனக்குப் புத்திரப்பாக்கியம் வேண்டியும் அன்று பிரகலாதனுக்குக் காட்சியளித்ததைப் போல தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென சக்ர யாகம் செய்தார்.

ரோமரின் யாகத்தில் மகிழ்ந்த நரசிம்மர் இரண்ய வதம் செய்த போது இருந்ததைப் போன்று உக்ரமாகக் காட்சியளித்தார். அதனால் ஈரேழு பதினான்கு லோகங்களும் வெப்பத்தால் எரிய தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து நரசிம்மரை சாந்தமடைய செய்ய வாயு பகவானை அனுப்பி, தணித்தவராகக் காணப்பட்டார். முழுமையாக சாத்தி அடைய ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ நரசிம்மரின் வலது மார்பில் உடன் உறைந்ததாலே, உக்ரம் தணிந்து யோக நிலையில் அமர்ந்து பின் ரோமச முனிவருக்கு எண்ணற்ற வரங்கள் அருளினார்.

 
செய்வினை தோசம், திருஷ்டி தோசம், செவ்வாய் பாதிப்பு கடன் தொல்லை, கொடிய கஷ்டங்கள் ஆகியவற்றிற்கு உடனடியாகப் பலன் தரும் சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம், பிரதோச தின பிரதோச வேளையிலும், நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நடச்த்திர நாளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் இவரை வழிபடுவது சிறப்பு. எலுமிச்சை சாறு வெல்லம் கலந்த பானகம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்து வழிபட உடனடி நிவாரணம் கிட்டும்.
 
வழித்தடம்
 
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
- K. துரைராஜ்