அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - சிம்மம்

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - சிம்மம்

தனக்கென்று கொள்கையை வகுத்து செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தன ஸ்தானத்தில் அமர்ந்து எட்டாமிடத்தை பார்ப்பதும் பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து குருவை பார்ப்பதும் குரு சந்திர யோக பலனைக் கிடைக்க பெறுவீர்கள். இனி எதையும் பற்றி யோசிக்காமல் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்து விடுவீர்கள். அரசியலில் சிம்ம சொப்பனமாக இருப்பீர்கள்.
 
லாபஸ்தானத்தில் குரு இருந்து ஏழாமிடத்தை பார்ப்பதும் இனி 08-10-2025 முதல் அதிசார குரு எட்டாமிடத்தை பார்ப்பதால் எதிர்பாராத நன்மைகள் தேடி வரும். வரும் காலம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வருமானத்திற்கு தகுந்தபடி உங்களின் குடும்பத்தை நடத்த பழகிக் கொள்வீர்கள். சிலர் புதியதாக முயற்சி செய்து வருவாயை பெருக்கிக் கொள்வீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கமாட்டீர்கள். ராசியில் கேது இருப்பது உஷ்ண சம்மந்தமான உபாதை உண்டாகும்.
 
ஏழாமிடத்தில் சனி, ராகு சேர்க்கை ராசியை பார்ப்பது உங்களின் கூட்டாளிகளின் மூலம் வந்த தடைகள் நீங்கி மேன்மை பெறுவீர்கள். எதிலும் கவனம் செலுத்தி பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதை சாதிக்க எண்ணிணீர்களோ அதை அடையும் முயற்சியை கடைசி வரை விடமாட்டீர்கள். கொண்ட கொள்கை.. செய்த செயல்கள்.. அனைத்தும் வெற்றி பெற பாடுபடுவீர்கள். வைத்தியர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். திட்டமிட்டபடி எல்லாம் நல்ல படியாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு,
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
ஞாயிறு, திங்கள், வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
05-10-2025 ஞாயிறு இரவு 12.25 முதல் 08-10-2025 புதன் அதிகாலை 05.41 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும். பைரவரையும் தொடர்ந்து வழிபட்டு தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் விரைவில் நடக்கும்.