அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - மிதுனம்

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - மிதுனம்

எடுத்த செயலில் முழுமையாக கவனம் செலுத்தும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு பஞ்சமஸ்தானத்தில் ராசிநாதன் புதன் அமர்ந்து லாபஸ்தானத்தை லாபாதிபதி செவ்வாயுடன் பார்ப்பதும் சந்திரன் பார்வை குருவுக்கும் ராசிக்கும் அமைவதும் எதிர்பாராத தனவரவுகள் வந்து சேரும். குடும்ப விருத்திக்கு வழிவகுக்கும்.
 
ராசியில் ஜென்ம குருவாக இருந்து ராசிநாதனுடன் லாபாதிபதி செவ்வாயையும் பார்ப்பது மிக நல்ல பலனை பெற்றுத் தரும். எதை செய்ய கூடாதோ அதை செய்யாமல் தவிர்த்து, சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இனி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நிலையை சரி செய்து கொள்வீர்கள். யாரிடமும் வீணான வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எந்த இடத்தில் தேவையற்ற பிரச்சனை வந்தாலும் அந்த இடத்தில் உங்களுக்கு உதவி செய்ய ஒருவர் வந்து அந்த இடத்தில் உங்களை காப்பாற்றி விடுவார்.
 
உஷ்ணம் சார்ந்த உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளதால் முடிந்த அளவு உணவு பழக்கங்களையும், பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்து கொள்வது நல்லது. மூன்றாமிட கேது உங்களுக்கு அதிக துணிச்சலை தருவார். உங்கள் தந்தையிடம் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படலாம். அல்லது தந்தைக்கு மருத்துவ செலவு வரலாம். இது மாதிரி சில தடைகள் வர வாய்ப்புள்ளதால் சற்று நிதானமான போக்கு நல்லது. கலைத்துறை சார்ந்த பணிகளில் மூன்னேற்றம் உண்டாகும். கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழிலில் மந்த நிலை நீடிக்கும். பணம் தாராளமாக புழங்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
புதன், வியாழன், திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
01-10-2025 புதன் பகல் 12.07 முதல் 03-10-2025 வெள்ளி இரவு 07.24 மணி வரையும்.
28-10-2025 செவ்வாய் இரவு 07.31 முதல் 31-10-2025 வெள்ளி அதிகாலை 03.08 மணி வரையும்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலையில் ஜெய் ஸ்ரீராம் எழுதி மாலை கட்டி போட்டு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல கஷ்டங்களும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.