அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - கன்னி

தன் கனவுகளை நனவாக்க துணிவுடன் செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதன், ராசிநாதனை பார்ப்பதால் பொருளாதாரத்தில் மேன்மையும் செய்யும் தொழிலில் விருத்தியும் பெறுவீர்கள். தடைகளை தகர்த்து.. தன்னிகரில்லா செயல்பாடுகளை ஊக்கபடுத்தும் நேர்மையுடன் இருக்க வேண்டுமென்று எண்ணும் உங்களின் செயல் பாராட்டுக்கு உரியதாக அமையும்.
ராசிநாதன் அட்டமாதிபதியுடன் இணைவதால் உங்களின் ஆவணங்கள் எதையும் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். எதை செய்தாலும் அதிலுள்ள நுணுக்கங்களை ஆராய்ந்து செயல்படும் உங்களின் செயல் மேன்மை அடையும். ராசியில் சூரியன் அமர்ந்து தைரியத்தையும். மன வலிமையும் தருவார். அரசியலில் நல்ல ஆலோசனை தரக்கூடியவராக இருப்பீர்கள். தன்னை பற்றி அவதூறாக யார் சொன்னாலும் அதன் ரிஷிமூலத்தை அறிந்து கொள்வீர்கள். பதவிக்காக எதையும் செய்யாமல் பாடுபடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். தூக்கமின்மை, உடல் அசதிகள் வந்து சில நேரம் துன்பம் தரும். போட்டிகளால் வரும். கஷ்டங்களை சவாலாக எடுத்து செய்து வெல்வீர்கள். ஆன்லைன் வர்த்தகம், நிதி துறை சார்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்வீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களை வளம் பெற செய்யும். கருத்துகளை வெளிபடுத்தும் போது துணிச்சலாக சொல்வீர்கள். இம்மாத இறுதியில் உங்களின் சகல கஷ்டங்களும் நீங்க சரியான வழி கிடைக்க பெறுவீர்கள். சாது போல் இருந்து சாதுர்யமாக செயல்படுவீர்கள். பண புழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-10-2025 புதன் அதிகாலை 05.42 முதல் 10-10-2025 வெள்ளி காலை 06.06 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.