ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மீனம்
வாழ்வில் எளிமையும், அன்பையும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இட்டதால் தொழில் சிறப்பாக அமைந்தது. விரைய சனி வரும் 06.03.2026 முதல் ஜென்ம சனியாக வருவது உங்களின் மனரீதியான வலிமையை பெறுவீர்கள். கடந்த கால சூழ்நிலைகள் மறந்து வாழ்வில் சுபிட்சம் பெறுவீர்கள். எதிலும் திட்டமிடல் மூலம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் சனி விரயத்தில் இருந்தாலும் 06.03.2026 முதல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவது உங்களின் மனவலிமையை உறுதி செய்வார். ஆன்மீக வழிபாடுகளும், ஆன்மீக யாத்திரையும் சென்று வருவீர்கள். அதிகபடியான தான தர்மம் மூலம் உங்களின் கர்ம வினைகளை குறைத்து கொள்ளும் வாய்ப்பை பெற்று தருவார். சனி கொடுத்தால் யார் தடுப்பார்… என்பது போல நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்துவீர்கள். உறுதி தன்மையுடனும், முழுமையான நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.
ஆரம்பத்தில் விரைய சனியை குரு பார்வையால் அதிலிருந்து உங்களை காப்பாற்றினார். இனி வரும் 26.05.2026 முதல் கடகத்திற்கு குரு பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பது உங்களின் ஜென்ம சனி மேலும் பலம் பெறும் வாய்ப்பாக அமையும். குரு பார்வை கோடி நன்மை என்பது போல உங்களுக்கு சகல விதமான நற்பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். உச்ச வீட்டில் குரு அமர்ந்து ராசியை பார்ப்பதால் எல்லாம் சிறப்பாக அமையும்.
வரும் 13.11.2026 முதல் ராகு லாபஸ்தானத்திலும் கேது பஞ்சம ஸ்தானத்தில் குருவோடு இணைவும் பெறுவதும் மிக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். ஆன்மீக சேவையை தொடர்ந்து செய்து மேலும் நன்மையை பெறுவீர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வட கிழக்கு, தெற்கு,
அதிர்ஷ்ட எண்கள்:
3, 1, 7.
அதிர்ஷ்ட மாதம்:
ஜனவரி, மார்ச், ஓகஸ்ட், நவம்பர்.
பரிகாரங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் தொடர்ந்து பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு நவகிரக வழிபாடு செய்து புளி அன்னம் தானம் செய்து வர சகல காரியமும் அனுகூலமாகவும், வெற்றியும் தரும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554

















