குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - மிதுனம்

நல்லதை நினைத்து நல்லதை செய்து கொண்டு வரும் மிதுன ராசி வாசகர்களே!
 
இதுவரையிலும் விரைய குருவாக இருந்த குரு பகவான் இனி வரும் 11-05-2025 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்கிறார். கடந்த காலத்தில் தேவையற்ற பல செலவுகள் வந்து சிரமத்தில் இருந்தீர்கள் இனி ஜென்ம குரு இருக்குமிடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் சிறப்பாக அமையும்.
 
ஜென்ம குருவாக வந்து உங்களின் அனைத்து செயல்பாடுகளிலும் துரிதமாக செயல்படும் விதம் புதிய விடயங்களை பற்றி தெரிந்து கொள்தல் எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு குறிப்பெடுத்துக்கொண்டு செயல்படுதல் நல்லது. ஞாபக மறதிகள் வரும் என்பதால் நினைவுபடுத்தி கொள்வது நல்லது.
 
உங்களின் களத்திரஸ்தானத்தை பார்வை இடுவது திருமண காரியங்கள் பேசுதல், திருமணம் நடத்தல் வேறு சுபகாரியங்கள் வீட்டில் நடத்துதல் போன்ற காரியம் நடக்கும். மன அழுத்தம் அதிகமாக வரும் போது சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 08-06-2025 முதல் 08-07-2025 வரை குரு அஸ்தமானமாகும். காலம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாத்து கொள்வது அவசியம்.
 
உங்களின் பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது புனித யாத்திரை சென்றுவருதல். கோவில் காரியங்களில் முன்னின்று நடத்துதல். நற்காரியங்களும் உதவிகள் செய்தல் போன்ற செயல் நன்றாக நடக்கும். குரு பார்க்கும் இடம் சிறப்பாக இருக்கும். என்பதால் உங்களின் அனைத்து காரியங்களும் வளம் பெறும். குடும்ப சூழ்நிலைகளை மறந்து ஆன்மீக ஈடுபாடுகளை வளர்த்து கொண்டு அதற்கு நேரம் ஒதுக்கி செயல்படுவீர்கள். புதிதாக ஆன்மீக குருமார்களின் சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது கடன் பிரச்சனை நீண்டகால தீராத விடயங்கள் அனைத்து தீர்ந்து சுபிட்சம் பெறுவீர்கள். பணபுழக்கம் தாராளமாக இருக்கும்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் கொண்டை கடலையில் மாலை கட்டி போட்டு வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.