பிரதோஷ பூஜையின் மகிமைகள்!

பிரதோஷ பூஜையின் மகிமைகள்!

மனிதர்களாகிய நாம் எத் தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
 

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக் கிட்டும் பலன்கள்:
 
1. துன்பம் நீங்கி - இன்பம் எய்துவர், 2. மலடு நீங்கி - மகப் பேறு பெறுவர், 3. கடன் நீங்கி - தனம் பெறுவர், 4. வறுமை ஒழிந்து - செல்வம் சேர்ப்பர், 5. நோய் நீங்கி - நலம் பெறுவர், 6. அறியாமை நீங்கி - ஞானம் பெறுவர், 7. பாவம் தொலைந்து - புண்ணியம் எய்துவர், 8. பிறவி ஒழித்து - முத்தி அடைவர். 
 
பலன்கள்:
 
ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேலையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆல யம் சென்று வழிபட்ட பலன் கிட்டும்.
 
மஹா பிரதோஷம்:
 
ஐந்து வருட பலன் சனிக்கிழமை யில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபாவசம் இருந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக் கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறை வனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.
 
பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம்:
 
1. ஓம் பவாய நம - பகவானே என்னை காப்பாற்று, 2. ஓம் ருத்ராய நம - என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன், 3. ஓம் மிருடாய நம - என் துன்பங்களைப் போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன், 4. ஓம் ஈசனாய நம  - நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன், 5. ஓம் சம்பவே நம - எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல், 6. ஓம் சர்வாய நம - கொடியவர்களைத் தண்டிக்க தாங்கள் முன் வர வேண்டும், 7. ஓம் ஸ்தாணவே நம - பகவான் சிறிதும் ஆசையின்றி நிலை பெற்றிருப்பவர், 8. ஓம் உக்ராய நம - ஆசை, பாசம் எதிலும் நிலையான ஆட்சி செய்பவர், 9. ஓம் பார்க்காய நம - பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல், 10. ஓம் பரமேஸ்வராய நம - பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல், 11. ஓம் மஹா தேவாய நம - பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்.
 
N. கிருஷ்ணமூர்த்தி