குறைவற்ற செல்வம் வந்தடைய எளிய குபேர பூஜை

குறைவற்ற செல்வம் வந்தடைய எளிய குபேர பூஜை

ஒரு தூய்மையான மரப்பலகையில் அரிசி மாவினால் ஒன்பது கட்டங்கள் போட்டுக்கொள்ளவும். அதற்குள் அரிசி மாவினாலேயே (இங்கு காட்டியுள்ளபடி) எண்களை எழுதவேண்டும். ஒவ்வொரு எண்ணின்மீதும் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் எண் 1 என்பது மேலே இருக்கவேண்டும். நாணயத்தின்மீது மஞ்சள் குங்குமம் வைக்கவும். பலகைக்கு முன் லட்சுமி குபேரர் படம் வைக்கவும். பின்னர் கீழுள்ள சுலோகத்தை 11 முறை கூறவும்.

"ஓம் யக்ஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தனதான்ய ஸ்ம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா.'

ஒவ்வொரு முறை கூறும்போதும் ஒரு செந்நிற மலரை ஒவ்வொரு கட்டமாக வைத்துக்கொண்டு வரவும். மீதி இரண்டு மலர்களை லட்சுமி குபேரன் படத்திற்கு சமர்ப்பிக்கவும். இந்த பூஜையை தினமும் செய்யலாம்.

அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

ஆனால் தடைப்படக்கூடாது. அப்படி நேர்ந்தால் மனதினாலாவது வழிபடவேண்டும். பூஜையில் வைக்கும் நாணயத்தை பலகையைக் கழுவும்போது மட்டும் எடுக்கவும். நம்பிக்கையுடன் இந்த பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.