கல்ச்சர் + ஃபேஷன் தரும் சுங்குடி சாரீஸ்

கல்ச்சர் + ஃபேஷன் தரும் சுங்குடி சாரீஸ்

 இன்றைய தேதி வரை பெண்கள் திருமணம் போன்ற சுப நிகழ்வில் மணப்பெண்ணாக இருக்கிறார் என்றால் அவருடைய தோற்றத்தில் கலாச்சார உடை கட்டாயமாக இடம்பெறும். அதிலும் கலாச்சாரத்தையும், ஃபேஷனையும் ஒன்றிணைக்கும் சுங்குடி சேலைகள் தவறாமல் இடம்பெறும். 

சுங்குடி சேலைகளா..! (Sungudi Sarees) என்றவுடன் இதற்கான வரலாறு குறித்து கூகுளில் தேட வேண்டாம். இணையத்தில் இதற்கான விற்பனை தளங்கள் தான் அதிகம். ஆனால் தகவல்கள் குறைவு. சரி, உங்களுக்கு விலைக்கு ஏற்ற தரமான சுங்குடி சேலைகளை எங்கு வாங்கலாம் என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்! அதான் Prabanja Sugudis இருக்கிறதே! இங்கு 85% காட்டனால் தறியில் நெய்யப்பட்ட ஒரிஜினல் சுங்குடி சேலைகள் நிச்சயம் கிடைக்கும். இந்நிலையில் சுங்குடி சேலைகளை பற்றி ஓரிரு வார்த்தைகளில் விவரிக்க வேண்டும் என்றால்.. இந்தியாவின் வட பகுதியில் இருந்து ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறிய சௌராஷ்டிரா சமூகத்தினர் தங்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க இத்தகைய ஆடையை வடிவமைத்தனர். 

இயல்பிலேயே கருணையும், சைவத்தையும் போற்றும் சௌராஷ்ட்ரா சமூகத்தின் பெண்கள் மதுரையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை தேடிய போது.. இங்கு தூய வடிவிலான பருத்தி அதிகமாக கிடைப்பதை உறுதி செய்து கொண்டு, பருத்தியாலான சேலைகளை உருவாக்கத் தொடங்கினர். இதற்காக இவர்கள் இயற்கையான தாவரங்களிலிருந்து கிடைக்கும் வண்ணங்களை பயன்படுத்தினார்கள். 

புடவைகளை (Sungudi Sarees)  தயாரித்தாலும் இதில் தங்களுடைய தனித்துவ பாணி பளிச்சிட வேண்டும் என்பதற்காக அப்போதைய புழக்கத்தில் இருந்த தமிழக பெண்களின் புடவையின் நீளத்தை விட அதிகமாகவும், வண்ணங்களை பளிச்சென்று தெரியும் வகையிலும் வடிவமைத்தனர்.  இத்துடன் இல்லாமல் அந்த சேலையில் இவர்கள் பதிக்கும் அச்சினையும் தொடக்க முதல் இறுதி வரை சீராக அச்சிட்டு, தனித்துவ அடையாளத்தை உண்டாக்கினர்.   

இவர்கள் இதனை அணிந்து கொண்ட பிறகு.. ஏனைய பெண்கள் இந்த புடவையை பற்றி ஆச்சரியங்களுடன் விபரங்களை கேட்க.. அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது மட்டுமல்லாமல் சுங்குடி (Sungudi) புடவைகளை உருவாக்கும் கலை நுட்பத்தையும் , தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். 

நாளடைவில் மதுரை சேலை என்றும், சுங்குடி புடவைகள் என்றும், சின்னாளப்பட்டு சேலைகள் என்றும்  குறிப்பிடப்பட்டது. இதனை இன்றைய இளம் பெண்களும் விரும்புவதற்கான முதன்மையான காரணம் இவை எடை குறைவானவை. அணிந்து கொள்வதற்கு சௌகரியமானவை. வண்ணங்கள் இயற்கையானவை. அதிலும் அவை பளிச்சென்று இருப்பதால் அவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இன்றும் இதற்கு பெண்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 

For Sungudi Sarees Best Online Shoping : https://sungudi.com/

To get more Sungudi Saree Designs Whatsapp : 9500066188