விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மேஷம்

வாழ்க்கையில் எப்பொழுதும் மேன்மை பெற நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பெயர்ச்சி, ராகு / கேது பெயர்ச்சி உண்டாவதால் உங்களின் செயல்களிலும், பேச்சிலும் திறமையை அதிகரிக்க துவங்குவீர்கள். பல்வேறு சோதனைகளிலிருந்து இனி விடுபடும் சூழ்நிலை உருவாகும்.
உங்களின் ராசியில் உச்சம் பெறும் சூரியன் உங்களுக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு நல்ல காரியங்களுக்கு உதவிகளைப் பெற்று தருவார். தனஸ்தானத்தில் குரு வைகாசியில் பெயர்ச்சியாகி மூன்றாமிடத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு விரையாதிபதி குரு மூன்றில் மறைவு பெறுவதால், எங்கும் உங்களின் வளர்ச்சிக்கு உண்டான நல்ல நிலைகளைப் பெற்று தருவார், குரு பார்க்க கோடி நன்மை என்பது போல குரு ஏழாமிடத்தையும் பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பதால் தொழிலில் முடங்கி கிடந்த காரியம் இனி செயல்படதுவங்கும். நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்த கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதாவ், சில காரியங்களில் தடைபடுதல், கிடைக்க வேண்டிய பொருள்கள் கிடைக்காமல் தடைபடுதல்.. போன்ற செயல்கள் இருக்கும். இருந்தாலும் உங்களுக்கு ஊக்கம் தருகின்ற வகையில் லாபஸ்தானத்தில் ராகு அமர்ந்து. உங்களின் தேவைகளுக்கு பக்கபலமாக அமைவார். ராகுவுடன் சனி சேர்க்கை இருப்பதால், கூட்டு தொழிலில் நீங்கள் சேரும் நபர்கள் நல்லவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட சில விடயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலனின் சிறப்பான முன்னேற்றம் அடைய வாய்ப்பு அமையும். பணம் தாராளமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 2, 3, 9.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை காலை 06 - 07 மணிக்குள் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் தீபம் விநாயகருக்கு ஏற்றி, அருகம்புல் மாலை, து.பருப்பு கலந்த அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.