விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - தனுசு

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - தனுசு

எந்த முடிவுவையும் விரைவாக எடுத்து செயல்படுத்தும் தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு துவக்கத்தில் ராகு மூன்றாமிடத்திற்கும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் அமர்வதும், அடுத்து குரு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது நல்ல முன்னேற்ற காலமாக அமையும். தெரிந்த செயல்களில் உறுதியுடன் இறங்கி வேலை செய்வீர்கள். குடும்ப நன்மைகளை கருதி நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் வரவேற்கும்படி அமையும்.
 
இந்த ஆண்டு 26-04-2025 அன்று ராகு மூன்றாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுகிறார் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சனியும் / ராகுவும் இணைவதால் நீங்கள் எந்த முடிவுகள் எடுத்தாலும் முழுமையான வெற்றியை பெறுவீர்கள். நீங்கள் முடிவு எடுத்த பிறகு வேறு எந்தவித மாற்றமும் உண்டாகாது. எடுத்த முடிவின் படி செயல்படுவது  நல்ல காலமாக அமையும். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கேது பாக்கியஸ்தானத்தில் இருப்பது பாக்கியஸ்தானத்தில் இருந்து குருவை பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். குருவும் / கேதுவும் இணைவது பொருளாதாரத்தில் சிறப்பான பலன் உண்டாகும்.
 
குரு 11-05-2025-ல் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது உங்களின் வாழ்வில் நல்ல பொருளாதார மாற்றங்களையும், வளர்ச்சியையும் பெற்று தரும். குரு ஐந்தாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மூன்றாமிடத்தையும் பார்ப்பது இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான நன்மை பெறுவீர்கள். 08.03.2026 வருட முடிவில் சனி நான்காம் இடத்திற்கு மாறும் வரையில் உங்களின் வாழ்வில் அற்புதமான மாற்றங்களும், வளர்ச்சியும் அமைய பெறுவீர்கள். நினைத்தபடி சகல காரியமும் வெற்றியை தரும். குடும்ப நன்மைகளுக்கு ஆன்மீக ஈடுபாடு கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  
 
வியாழன், சனி, திங்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
மஞ்சள், வெண்மை, நீலம்.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
2, 3, 8.
 
பரிகாரங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரம் பருப்பு அன்னம் நைவேத்தியம் வைத்து நெய் தீபமேற்றி தொடர்ந்து வேண்டிவர சகல காரியமும் நினைத்தபடி சிறப்பாக அமையும்.