ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்

ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்

விறுவிறுப்பாக எந்த செயலையும் செய்ய துடிக்கும் விருச்சி ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு மூன்று, நான்குக்குரிய சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் அமர்வதும், குரு அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் அர்தாஷ்டம சனியிலிருந்து விலகினாலும் குரு பெயர்ச்சி வரை சில சிரமம் அடைய வேண்டி வரும். வைகாசியில் குரு பெயர்ச்சி ஆன பின்பு ராசிக்கு குரு பார்வை படுவது மிக சிறப்பான பலனாக அமையும். உங்களின் வாழ்வில் வெற்றி பயணத்தை தொடங்க ஆரம்பிப்பீர்கள். நினைத்ததை அடைவீர்கள்.
 
உங்களின் தன காரகனும், பஞ்சமாதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் அட்டம ஸ்தானத்தில் இருப்பது பணபுழக்கம் இன்றி தவிப்பீர்கள். பணம் வர வேண்டிய இடத்தில் முடங்கி கிடக்கும் நிலை இருக்கும். இனி வைகாசி மாதம் முதல் குரு பெயர்ச்சிக்கு பின்பு ராசியை குரு பார்வை இடுவது உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். குரு பார்க்க கோடி நன்மை அதுவும் யோகாதிபதி வீட்டில் குரு உச்சம் பெற்றால் எப்படி இருக்கும். எண்ணத்தை அப்படியே செயல்படுத்த துவங்கும். நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும். இனி சரியான பொருள் உதவி கிடைக்கும். தீர்வுகளை தேடி செல்வீர்கள். முதலீடு இல்லாத தொழில் சிறப்பாக இயங்கும். குறையின்றி வாழும் வாழ்க்கை சூழ்நிலை அமையும். சுறுசுறுப்பும், நேர்மையும் உங்களின் அந்தஸ்தை உயர செய்யும். உங்களிடம் கொடுத்த வேலையை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை விளங்கும்.
 
மூன்று, நான்காமிடத்து அதிபதி சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் அமர்வது எதற்கு கஷ்டப்படுகிறோம் என்று கூட தெரியாமல் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்தீர்கள். அவிழக்க முடியாத முடிச்சாக இருந்தது. அதை எப்படி வெல்வது என்று தெரியாமல் இருந்தீர்கள். இனி முடிச்சு தானே கழன்று விடுவதை அதிசயமாக பார்ப்பீர்கள். இதனால் தான் இதுவரை இப்படி இன்னல்களை அடைந்தோமா என்று உணரும் போது மிக்க மகிழ்ச்சியை அடைவீர்கள். இனி எதுவும் சாத்தியமே என்று நிலைக்கு வருவீர்கள். சனி கொடுத்தால் யார் தடுப்பார்கள். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வம் வெளிப்படும். புனித யாத்திரை சென்று வருவீர்கள்.
 
13-11-2026 முதல் ராகு / கேது பெயர்ச்சி பின்பு மூன்றில் ராகுவும் பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து புனித யாத்திரை சென்று வருதல். ஆன்மீக பயணம் மூலம் புதிய அனுபவம் பெறுவதும் குலதெய்வ வழிபாடு செய்து நல்ல பலன்களை பெறுவீர்கள். மூன்றாமிட ராகு உங்களை எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியை பெற உதவி செய்வார். தொடர்ந்து பல நன்மைகளை அடைவீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்காமல் உங்களின் போக்கில் பயணம் செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உஙகளின் வாழ்க்கை சிறப்பாக செழிப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
2, 3, 9.
 
பரிகாரங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூவால் மாலை போட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர உங்களின் எண்ணங்கள் அனைத்து சிறப்பாக நடக்கும். பொருளாதார மேன்மை பெறுவீர்கள்.