ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - துலாம்
தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் துலாம் ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு நான்கு, ஐந்துக்குரிய சனி பகவான் ஆறாமிடத்தில் அமர்வதும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடும். குரு பகவானும் நல்ல வளர்ச்சி பாதையை காட்டி வளம் பெற செய்வார். உங்களின் எண்ணங்களின் வடிவங்களை செயல்பட செல்வார்கள்.
உங்களின் ராசிக்கு மூன்றாம், ஆறாமிடத்து அதிபதியான குரு ஆண்டின் துவக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது உங்களின் எதிர்கால பலன்கள் சிறப்பாக அமையும். புனித நீராடல், மகான்களின் தரிசனம், புனித யாத்திரைகள் சென்று வருதல்.. போன்ற பலன்களை பெறுவீர்கள். எதிலும் தைரியமுடனும், துணிச்சலுடன் செயல்படுவீர்கள். காரணமின்றி எந்த செயலையும் செய்யமாட்டீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவது தனித்த குரு இருக்கும் வரையிலும் தொழிலில் பல இடையூறு உண்டாகும். கேதுவுடன் இணையும் போது மிக சிறப்பாக அமையும். தனஸ்தானத்தை குரு பார்ப்பது பணபுழக்கம் நன்றாக இருக்கும். எடுத்த நற்காரியம் சிறப்பாக அமையும். சுகஸ்தானத்தை குரு பார்ப்பது சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அமையும். ஏற்கனவே வீட்டுமனை இருப்பவருக்கு வீடு கட்டும் சூழ்நிலை அமையும். பழைய வாகனத்தை புதுப்பித்து கொள்வீர்கள். தொழில் அமையாமல் இருப்பவருக்கு நல்ல தொழில் அமையும்.
உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சனி பகவான் ஆறாமிடத்தில் அமர்வது யோக பலன்களை பெற்றுத் தரும். எல்லாவற்றையும் கடனாக பெற்று அதன் மூலம் வளர்ச்சியை அடைவது சாத்தியமாகும். வங்கி மூலம் கடன் பெறுவதும் தொழிலை அதன் மூலம் வளப்படுத்தி கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவருக்கு பணிசுமைகள் குறையும். உங்களை மதிப்பவரை நீங்களும் மதிப்பீர்கள். உங்களை வெறுப்பவரை நீங்களும் ஒதுக்கி தள்ளி விடுவீர்கள். யாருக்கும் எதையும் சும்மா கொடுக்கமாட்டீர்கள். வெளிநாட்டு வேலை செய்பவர்கள் தங்கள் தாயகத்திற்கு வரும் வாய்ப்பு அமையும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு சில நேரம் ஒய்வின்றி உழைக்கும் சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினருக்கு தொழிலில் எடுத்த முயற்சி கைகூடும். வரவுக்கு மீறிய செலவு வரும். பின்பு சரியாகும். எதையும் கண்காணித்து அதன் பின்பு அதில் செய்படுவது மிக முக்கியமாகும்.
கார்த்திகையில் ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு கேந்திர ஸ்தானத்தின் அமர்வது உங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பாக அமையும். தெரிந்த நபராக இருந்தாலும் தொழில் என்று வரும் போது கறாராக இருப்பது நல்லது.. ராசிநாதன் இருக்கும் நட்பு ராசியை பொறுத்து உங்களின் பலன்கள் நன்றாக இருக்கும். தொழிலிலும் உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து அதன் பின்பு பயணம் செய்வது சிறப்பு. அரசியலில் சற்று பலன் குறைவாக இருப்பதால் அமைதி காத்தல் நன்மையை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 6, 8.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றி எலுமிச்சை அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் வெற்றியையும் பொருளாதார வளமும் பெறுவீர்கள்.
















