ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்
சரியான நேரத்தில் எதையும் செய்து நல்ல பலனை பெறும் ரிஷப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி சனி அமர்வதும், குரு இந்த ஆண்டில் மூன்றில் அமர்ந்து களத்திர, பாக்கிய லாப ஸ்தானங்களை பார்வை இடுவதும் மிக நற்பலனை பெற்று தரும். இதுவரை பல சோதனைகளை தாங்கி அவஸ்தை பட்டு வந்த உங்களுக்கு மிக பெரிய அளவிலான நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் ஸ்தானத்தின் அதிபதியான சனி பகவான் இனி லாபஸ்தானத்தில் அமர்வது பெறும் சிறப்பு. சனி இருக்கும் இடம் சிறப்பு என்பதால்… அந்த இடம் நல்ல விருத்தியை தரும். கிடைக்க வேண்டிய தொகை, பொருள் கிடைக்க பெறுவீர்கள். பொது விடயங்களில் வேண்டிய வசதிகளை பெறுவீர்கள். அரசியலில் சாணக்கிய தனத்தில் கெட்டிகாரராக இருப்பீர்கள். எதையும் சாதித்து காட்டும் வல்லமையை பெறுவீர்கள். வரும் காலத்தில் உங்களின் எண்ணம் பிரமாண்டமாக இருக்கும் இனி, உங்களின் செயலிலும் மிகை படும் படியாக அமையும். ஆதியும் அந்தமும் இல்லாத இறை அருள் உங்களுக்கு அதற்குரிய ஆசான் மூலம் கிடைக்க பெறுவீர்கள்.
குரு வரும் வைகாசி முதல் மூன்றாமிடத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவதால் திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வேண்டிய வசதிகளை எளிமையாக பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்க பெறுவீர்கள். உங்களை அணுகி வரும். அன்பர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். பலமுறை சென்றும் சந்தர்ப்பம் அமையாமல் இருந்தவர்களுக்கு அவர்களே கூப்பிட்டு வாய்ப்புகளை வழங்குவார்கள். லாபாதிபதியின் பார்வையால் பல நற்பலன்களை பெற்று வளம் கிடைக்கும்.
கார்த்திகையில் ராகு / கேது பெயர்ச்சியில் மூன்றில் கேது குருவோடு அமர்ந்து ராகு பாக்கிய தானத்தில் அமர்ந்து உங்களின் வளர்ச்சிக்கு நல்ல முக்கியத்துவம் கிடைக்க செய்வார். எடுத்த காரியம் வெற்றியை தரும். இந்த ஆண்டு முழுவதும் நற்பலன்களை பெறும் ராசிகளில் நீங்கள் முதன்மையாக இருப்பீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்கால நலனுக்கு சேமிப்புகள் செய்து வளம் பெறுவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். கடந்த கால நிலை மாறி நன்மையை பெறுவீர்கள். பண புழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
6, 7, 8.
பரிகாரங்கள்:
வியாழகிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து அருகம்புல் மாலை சாற்றி தேங்காய் எண்ணெய் தீபமேற்றி பழங்கள் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் ஜெயம் உண்டாகும்.
















