ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மகரம்
தெரிவு செய்த செயலில் தொடர்ந்து செயல்படும் மகர ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதனும், தனஸ்தானாதிபதியுமான சனி பகவான் இதுவரை ஏழரை சனியாக இருந்து விலகி மூன்றாமிடத்தில் யோக சனியாக அமர்வது உங்களின் ராசிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைவு ஸ்தானாதிபதியான குரு ஆறில் மறைந்து இருந்து பின்பு குரு ராசியை பார்வை இடுவது மிகப்பெரிய நற்பலன்களை பெற்று தரும்.
ராசிநாதனாகிய சனி பகவான் மூன்றாமிடத்தில் சனி அமர்வது இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் விலகி நல்ல பலனை பெற்று வளம் பெறுவீர்கள். சரியான நேரத்தில் எதையும் செய்து நன்மையை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் இனி நீங்கும் பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள். சுறுசுறுப்பாக இயங்கும் உங்களின் செயல்களில் இனி உத்வேகம் இருக்கும். இதுவரை பட்ட கடன்கள் நீங்கும். படிப்படியாக வாழ்க்கை சூழ்நிலை மாறுபடும். உங்களின் அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமையும். கொடுத்த இடத்தில் பணம் கிடைக்க பெறுவது நல்லது. தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்து வருவீர்கள். பொது விடயங்களில் பல பிரச்சனைகளை பேசி தீர்த்து வைப்பீர்கள். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் இருக்கும் இடத்தை பொறுத்து உங்களின் வளர்ச்சி இருக்கும். யோகாதிபதி சுக்கிரன் என்பதால் எதையும் வெல்லும் வலிமையை தருவார்.
உங்களின் மறைவு ஸ்தானாதிபதியான குரு பகவான் உங்களின் ராசிக்கு மட்டும் மறைந்தாலும் பலனை தருவார். பார்த்தாலும் பலனை தரும். குரு வரும் 26-05-2026 முதல் உங்களின் ராசியை பார்ப்பது உங்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு உறுதுணையாக வெற்றி பயணம் செய்வீர்கள். விரைய குரு வளமான வாழ்க்கை பெற்று தருவார். திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். ஐந்தாம், ஒன்பதாம் அதிபதியுடன் குரு இணையும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். தங்க நகையை கனவில் காண்பது சாத்தியம் அதுபோல நீங்கள் தங்க நகையை வாங்குவதும் சாத்தியமே. உங்களின் சொந்த முயற்சிகள் சிறப்பாக அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.
13-11-2026 முதல் ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு ராசியில் ராகு அமர்ந்து குருவுடன் கேதுவும் இணையும் பல சாதனைகளை பெற்று வளமுடன் இருப்பீர்கள். உங்களின் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும் செய்யும் தொழிலில் வளம் பெற பல உதவிகளை பெறுவீர்கள். மன துணிச்சலுடன் எதையும் சாதித்து காட்டுவீர்கள். பொருளாதார மேன்மை உண்டாகும். கலைதுறையினருக்கு நல்ல காலமாக அமையும். கல்வியின் மாணவர்கள் சிறந்து சிறந்து விளங்குவீர்கள். புத்திர, புத்திரிகளுக்கு திருமணம் செய்வீர்கள். வெள்ளி பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 6, 8.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் நிறை வஸ்திரத்தை சாற்றி, மஞ்சள் பூ வைத்து நெய் தீபமேற்றி இனிப்பு வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியையும், பொருளாதார வளர்ச்சியையும் பெற்று தரும்.
















