ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - தனுசு
துணிச்சலும், தைரியமும் கொண்டு எதையும் சாதிக்கும் தனுசு ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தன, கீர்த்தி ஸ்தானாதிபதியான சனி பகவான் சுகஸ்தானத்தில் அமர்ந்து அர்த்தாஷ்ட சனியாக இருப்பது உடல் நலனில் சற்று கவனம் செலுத்தும்படி அமையும். வாகன பழுது வாகன மாற்றம் செய்தல் போன்றவை உண்டாகும். ராசிநாதன் தனஸ்தானத்தை பார்வை இடும்போது பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு சனீஸ்வரர் பெரும் பாக்கியவானாக தனஸ்தானத்திற்கு அதிபதியாக இருப்பதால் சுகஸ்தானத்தில் குரு வீடு என்பதால் வாகன வசதிகளை பெருக்கி தருவார். பழைய வாகனத்திற்கு பதில் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சனியை குரு பார்ப்பதன் மூலம் எல்லாம் நன்மையாக அமையும். தாயாருக்கு உடல்நலனை கவனிக்க வேண்டிவரும். சிலருக்கு தாயாரைவிட்டு பிரிந்து இருக்கும். நிலை ஏற்படலாம். உறுதியான மனநிலையுடன் செயல்படுவீர்கள். எதையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். வீடுகட்டும் யோசனைகளை செயல்படுத்த துவங்கி முயற்சிகளை மேற்கொள்வீர்கள். யோக சனியாக மூன்றிலிருக்கும் போது செய்யாத சனி பகவான் இப்பொழுது உங்களுக்கு அந்த உதவியை செய்வார். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியை செய்வீர்கள்.
செய்த உதவியை மறக்காமல் பிறருக்கு செய்த தனபாக்கியமாக செய்வீர்கள். சொல்லி செய்வதில்லை சொல்லாமல் செய்வதே உதவி. குரு உங்களின் ராசிநாதன் என்பதால் துவக்கத்தில் ராசியை பார்த்த குரு பகவான் வைகாசியில் (26-05-2026) அட்டமஸ்தானத்தில் வந்து அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பதும் சனியை பார்ப்பதும் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வார். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க பெறுவீர்கள். சமமான அந்தஸ்து உள்ளவரின் நட்பை விரும்புவீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் படிபார்த்துக் கொள்வீர்கள். அரசாங்க உத்தியோகம் பார்த்து வருபவருக்கு இடமாற்றம், பணி மாற்றம் உண்டாக வாய்ப்புகள் அமையும். அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். சிலருக்கு நல்ல பதவி கிடைக்க வாய்ப்பு அமையும். சோதனை காலங்களில் உங்களுடன் இருந்தவர்கள். இப்பொழுதும் உங்களை அனுசரித்து கொள்வார்கள். பண தேவைகள் பூர்த்தியாகும்.
13-11-2026 முதல் ராகு / கேது தனஸ்தானத்தில் ராகுவும், அட்டமஸ்தானத்தில் கேதுவும் அமர்வது கிடைத்ததை வைத்து பெருமை கொள்வது நல்லது அதிக ஆசைகளும், தேவையற்ற நண்பர்களின் நட்பையும் ஒழித்துவிட்டு குடும்ப நன்மையும், வளர்ச்சியும் பற்றி சிந்தித்து வந்தால் எல்லாம் வெற்றியை தரும். கருத்துகளை வெளிபடுத்தி கொள்வதில் தாமதமின்றி சொல்வது உங்களுக்கு நல்லது. கலைத்துறையில் செல்வாக்கு பெறுவீர்கள். வெளிநாட்டவர்களின் தொடர்புகள் மேன்மை தரும். கணவன் - மனைவி உறவு சற்று சலசலப்பாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 6.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும், துளசி மாலை சாற்றி வெண்மை வைத்து நெய் தீபமேற்றி தொடர்ந்து வழிபட்டு, வர சகல காரியமும் தடையின்றி சுபிட்சமாக நடக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.
















