செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025- சிம்மம்

கடமையை உணர்ந்து தைரியத்துடன் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆட்சி பெற்று தனாதிபதி புதனுடன் இணைவு பெறுவதும் உங்களின் பொருளாதார வளம் சிறப்பாக அமையும். லாப ஸ்தான குரு மேலும் வளர்ச்சியை பெற்று தரும். அரசியலில் ஏற்றம் பெறுவீர்கள். சமு தாயத்தில் பிறர் மதிக்கும் வண்ணம் உங்களின் வளர்ச்சியை பெருக்கி கொள்வீர்கள்.
ஏழாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெற்று ராசியை பார்ப்பதால் எந்த காரியமும் உடன் நடக்காமல் சற்று தாமதமாக செயல்படும் என்றாலும் குரு பார்வை அந்த இடத்திற்கு இருப்பதால் அவர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். தொடர்ச்சியான செயல்கள் மதிக்ககூடிய வழிகளில் அமையும். யார் என்ன சொன்னாலும் யார் எதை செய்தாலும் உங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. மதிப்புமிக்க நண்பர்களின் தொடர்புகளால் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.
வாழ்க்கைக்கு எது தேவையோ அதனை அறிந்து உங்களின் செயல்கள் சிறப்பாக அமையும். மகாலெட்சுமி யோகம் சிலருக்கு கிடைக்கும். சூரியன் ஆட்சி பெற்று பலம் பெறுவதால் அரசியலில் உங்களின் செல்வாக்கு சிறப்பாக அமையும். கலைத்துறையினருக்கு அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் ஒப்பந்தங்கள் கிடைக்க பெற்று வளர்ச்சியை பெறுவீர்கள். சிலருக்கு வீண் அலைச்சல் இரவு கண் விழிக்கும் நிலைகளும் ஏற்படும்.
சரியான காலகட்டத்தில் உங்களின் கடமைகளை சரியாக செய்து அனைவருக்கும் உதவிகளை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது போட்டிகளில் வெற்றியை பெற்று பரிசுகள் பெறும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தாயார் உடல்நலன் நன்றாக இருக்கும். உடல்நலனின் பாதிப்பை பெற்று இருப்பவர்களுக்கு உடல் நலன் தேறி தீர்த்த யாத்திரை சென்று வர தாயாருக்கு வாய்ப்புகள் அமையும். பாடசாலை கல்வியில் பலருக்கு கல்வியில் அக்கறையுடன் படித்து உபதேர்வுகளில் நல்ல மதிப்பை பெறுவார்கள். உடலுக்கு உடன் எதையும் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-09-2025 திங்கள் கிழமை மாலை 04.33 முதல் 10-09-2025 புதன் இரவு 07.41 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு ராகு காலம் 04.30 - 06.00 மணிக்கு பைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபமிட்டு சிவப்பு அரளிப்பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் கைகூடும்.