செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மிதுனம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மிதுனம்

ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கொண்டு செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு அமர்ந்து பார்க்குமிடம் சிறப்பான பலன்களை தரும். ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது இன்னும் சிறப்பான பலன்களை பெற்று தரும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்து பொருளாதாரத்தில் மேன்மை அடைய செய்வார்.
 
உங்களின் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தின் பார்வையால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்களை பெற செய்வார். இனி வரும் காலங்களில் உங்களின் தேவைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வார். கலைத்துறை அன்பர்களுக்கு எல்லா நலன்கள் கிடைக்க பெறும் வாய்ப்புகள் உண்டாகும். ராசியில் இருக்கும் குரு ஆன்மீக சிந்தனைகளை தந்து தெய்வ வழிபாடுகளை செய்ய வைப்பார். அவர் பார்க்குமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். குலதெய்வ வழிபாடுகள் சிறக்கும். களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடக்கும். மனைவி மூலம் கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.
 
பாக்கியஸ்தானத்தில் சனியே அமர்ந்து அவரை குரு பார்ப்பதும் வெளிநாட்டு பயணம் செல்வது, புனித நீராடுவது, புதிய அனுபவங்களை பெறுவது,. இதுபோன்ற அனுபவங்களை பெறுவீர்கள். நல்ல முயற்சிகளுக்கு நற்பலன்களை பெறுவதுடன் நினைத்த காரியம் கைகூடும். அரசியலில் பெரிய ஆர்வம் இருக்காது. ஆலோசனைகளை சொல்வதில் மிக திறமையானவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். கலைத்துறையினருககு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணிதவியலிலும், ஜோதிடத்திலும், ஆராய்ச்சியிலும் சிறப்பான நல்பலன்களை பெறுவீர்கள். இம்மாதம் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
புதன், வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
04-09-2025 வியாழன் அதிகாலை 04.47 முதல் 06-09-2025 சனி பகல் 11.45 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு வண்ண பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றியும், சனிக்கிழமை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் வழிபட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.