கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்!

கோயில் கோபுரம் மிக உயர்ந்து நிற்க ஊரில் மற்ற அனைத்துக் கட்டிடங்களும் கோபுரத்தைவிட உயரம் குறைவாகவே அமைக்கப்பட வேண்டும் என்பது நகர நிர்மாண விதியாகவே நம் நாட்டில் இருந்தது.
 
நமக்கு படியளக்கும் எம்பெருமான் ப்ரபஞ்சத்தை ஆளும் பரமனின் திருக்கோயிலுக்கு முன்னால் நமது இல்லங்கள் உயர்ந்து நின்றால் அது அஹம்பாவமாகி விடும் என்பது ஒன்று.
 
ஊரில் கோபுரம் மட்டுமே உயர்ந்து நின்றால் மற்ற கட்டிடங்கள் அதனை மறைக்கா எனவே எங்கிருந்து நோக்கினாலும் கோபுர தரிசனம் கிட்டும்.
 
கோபுர உச்சியில் செம்புக் கலசங்கள் அமைந்திருக்கும் அவை இடி மின்னல் ஆகியவை தாக்கும் போது அதனை க்ரஹித்து பூமியில் பாய்ச்சிவிடும். இல்லையேல் ஊரில் உள்ள மற்ற கட்டிடங்கள் இத்தாக்குதலுக்கு ஆளாகும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். ஆலய வழிபாட்டுக்குச் செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுர தரிசனம் செய்தால் ஆலய தரிசனம் செய்த முழுப் புண்ணியமும் கிடைக்கும்.
 
கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்து வணங்கி கோயிலுக்குள் புக வேண்டும்.
 
கோயில்கள் நமது உடம்பின் வடிவிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. இதனை “க்ஷேத்திரம் சரீர ப்ரஸ்தாரம்” என்பர்.
 
இதனையே திருமூலர்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளித்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே
 
எனக் கூறுகிறார்.
 
இதனை வேறொரு முறையிலும் மனித உடம்போடு ஒப்பிட்டுக் கூறுவதுண்டு.
 
தேஹோ தேவாலய ப்ரோக்தோ
ஜீவோ தேவ ஸனாதன
த்யஜேத் அங்ஞான நிர்மால்யம்
ர்ஸோஹம் பாவேன பூஜயேத்
 
என்ற ஒரு சுபுர்ஷிதத்தாலும் இதனை அறியலாம்.
 
ஆலய கோபுரத்தை “பரம்மரத்தர மத்ய கபால த்வாரம்” என்று யோகிகள் கூறுவர்.
 
ப்ராகார ப்ரதக்ஷிணம்
 
ப்ராகாரங்களைச் சுற்றி வலம் வருவது கோசங்களைக் கடந்து உள்ளே இறைவன் விளங்குகிறான் என்பதை நினைவூட்டுகிறது.
 
ப்ராகாாரங்களை வலம் வருவது ஒவ்வொரு கோசத்தையும் கடப்பது ஆகும்.
 
உடல் ரீதியாக ப்ராகாரங்களை வலம் வருவது நமக்கு நல்ல நடைப்பயிற்சியாகவும் அமைகிறது.
 
இன்று மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பலர் தினந்தோறும் Walking போகின்றனர். இப்படி நூற்றுக் கணக்கான மக்கள் பல பூங்காக்களில் நடைப் பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்கிறோம்.
 
தினசரி ஆலய தரிசனம் சேய்யச் செல்வோர் வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் நடைப்பயிற்சியினால் கிடைக்கும் தேஹ ஆரோக்கியத்தைப் பெறுவதோடு மனத்திற்கு நிம்மதியும் பெறுவர்.
 
வாயில் இறைவன் திருநாமம் நெஞ்சில் அந்த இறைவனது சிந்தனை இவற்றோடு நல்ல நடைப் பயிற்சி இந்த மூன்றும் இணைந்ததுதான் ப்ராகாரத்தைச் சு்ற்றி வரச் சொன்னதில் உள்ள தாத்பர்யம்.
 
ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய மனத்திறன் இல்லாதவர்கள் Walking Meditation என்ற ஒன்றை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். தியானத்தின் போது தூக்கம் வராமல் இருக்க Walking உதவுகிறது. இதனால் இதனை Walking Mediation என்று அழைக்கலாம்.
 
While the bod is in movement, the mind is in silence.
 
அதுதான் ப்ராகாரத்தைச் சுற்றி நாம் மேற்கொள்ளும் ப்ரதக்ஷிணம்.
 
விக்ஹத்தின் வலப்புறம் ஆரம்பித்து இடப்புறமாக ப்ரதக்ஷிணம் செய்தலே சரியானது வலப்புறமாகச் செல்வதாலேயே இதனை வலம் வருதல் என்கிறோம்.
 
கைகளை ஒருங்கிணைந்து கூப்பிய வடிவில் வைத்திருக்க வேண்டும். விக்ரஹத்தை மனதில் இருத்திய வண்ணம், கடவுளின் நாமத்தை ஜபம் செய்தவாறு மெதுவாக வலம் வர வேண்டும்.
 
நிறை மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தன் கையில் விளிம்பு வரை எண்ணெய் உள்ள ஒரு கிண்ணத்தை ஏந்திக் கொண்டு எண்ணெய் கீழெ சிந்தாமல் நடக்க வேண்டுமானால் எப்படி அடியெடுத்து வைத்து மெதுவாகப் போவானோ அப்படி வலம் வர வேண்டும்.
 
இப்படி மெதுவாக ப்ரதாக்ஷிணம் செய்வது கர்ப்ப க்ருஹத்தைச் சுற்றி உள்ள ப்ராகாரத்தை வலம் வரும் போது மட்டுமே.
 
மற்றபடி வெளிப்ராகாரத்தில் வழக்கமான நடைவேகத்தில் வலம் வரலாம்.
 
கர்ப்பக்ருஹம் திறந்துள்ள போதே ப்ரதக்ஷிணம் செய்யப்படல் வேண்டும்.
 
உள் ப்ராகார ப்ரதக்ஷிணத்தை விட வெளி ப்ராகார ப்ரதக்ஷிணம் மும்மடங்கு நன்மை பயக்கும்.
 
மூர்த்திகளை ப்ரதக்ஷிணம் பண்ண வேண்டிய எண்ணிக்கை அளவு
 
விநாயகர் - 1, சிவன் - 3, முருகன் - 6. விஷ்ணு அம்பாள் - 4, நவக்ரஹம் - 9.
 
ஆண்கள் அங்கப்ரதஷிணம் செய்யலாம். பெண்கள் அங்கப்ரதக்ஷிணம் செய்யக்கூடாது. எனவே பெண்கள் அடிமேல் அடிவைத்து நடந்து அடிப்ரதக்ஷிணம் செய்யலாம்.
 
தலை முழுகி நீராடிவிட்டு ஈர உடையுடன் கோயிலுக்கு வந்து தரையில் படுத்து உருண்டு கோயிலை வலம் வரும் ப்ரார்த்தனை அங்க ப்ரதக்ஷிணம் எனப்படும்.
 
இப்படி அங்க ப்ரதக்ஷிணம் செய்வதன் தாத்பர்யம் என்ன?
 
காலம் காலமாக எத்தனையோ மஹான்களும் ஞானிகளும் கோயில்களிலி் வலம் வந்து வணங்கி வழிபட்டு மோக்ஷம் அடைந்திருப்பர்.
 
அப்படிப்பட்ட எத்தனையோ ம1ான்களின் திருவடிவபட்ட இடத்திலேயெ நம்முடைய தலை முதல் கால் வரை முழு சரீரமும் படும்படி படுத்து அங்க ப்ரதக்ஷிணம் செய்யும் போது அந்த ம1ான்களுடைய பாததூளியினால் நம்முடைய பாவங்கள் நசிந்து போகும்.
 
மஹான்கள் மட்டுமன்றி இதர பக்தர்களின் பாதச் சுவடுகள் படிந்த ப்ராகாரத்தில் படுத்துப் புரள்வது நமது பாபங்களை ஸம்ஹரிக்கும் என்பதில் ஐயம் ஏது?
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்