செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மீனம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மீனம்

சொல்லிலும், செயலிலும் வல்லமை பெற்று விளங்கும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்வை இடுகிறார். அட்டம ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த இடம் பலம் பெற்று விரையம் வராமலும், தடைவராமலும் பார்வையால் செயல்பட செய்வார். விரைய சனியை குரு பார்வை பெற்று தேவையற்ற செலவுகளை உங்களுக்கு தருவார். நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும். உடல் நலன் நன்றாக இருக்கும்.
 
எதை தேடி பயணம் செய்கிறீர்களோ.. அதை அடையும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். சரியான நேரத்தில் சரியான பாதையைில் உங்களை வழிநடத்திச் செல்லும் வகையில் எல்லாம் நானே நடக்கும். இடம் விட்டு இடம் பெயர்ச்சி ஆக வேண்டி வரும். மேற்கு, தெற்கு திசையில் குடி இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு திசைக்கு மாறுவீர்கள். கஷ்டங்களும், நஷ்டங்களும் விலகும். அட்டமாதிபதி சுக்கிரன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் எப்படிபட்ட போட்டிகளாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள்.
 
இசை கலைஞர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆலய திருவிழாக்களில் உங்கள் கலை நயம் வெற்றியை பெற்று தரும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொது வாழ்வில் சற்று கவனம் செலுத்தி தற்காத்து கொள்ளும் வழிகளை கடைபிடிப்பீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் உங்களின் ராசியையும் தனஸ்தானத்தையும் பார்வை இடுவதால் நினைத்த காரியம் கைகூடும். 
 
செவ்வாய் பலம் பெறுவதால் புதிய சொத்து வாங்க சிலருக்கு வாய்ப்பு அமையும். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சொத்து விற்று பணம் வரும் வாய்ப்பும் அமையும். எந்த சொத்தும் இல்லாதவருக்கு சொத்து வாங்கும் வாய்ப்பு அமையும். பாக்கியஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சந்திரன் அமர்ந்து மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் சிறக்க உதவிகள் பலரின் மூலம் கிடைத்து வருமானத்தை பெருக்குவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
24-09-2025 புதன் அதிகாலை 03.25 முதல் 26-09-2025 வெள்ளி பகல் 02.59 வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி சிவப்பு அரளி பூ மாலை சாற்றி எள் கலந்த அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் சுபமாக அமையும். பொருளாதாரம் பெருகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554.