செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மகரம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மகரம்

உண்மையும், நேர்மையும் உறுதியாக கொண்ட மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சுக்கிரன் பார்வை பெறுவதும் ராசிநாதன் தனஸ்தானத்தில் இருந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான நற்பலன் உண்டாகும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கும் அற்புத பலன்களை பெறுவீர்கள். எதையும் கவனமுடன் செய்வீர்கள். ஊக்கம் தரக்கூடிய செயல்களை செய்வீர்கள்.
 
விரையாதிபதி குரு ஆறாமிடத்தில் மறைவு பெறுவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். முக்கிய காரியங்களில் உங்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் வருவார்கள். பொது நலன் கருதி சிலருக்கு சேவை உணர்வுகள் மேலோங்கும். குறை சொல்லலே முடியாதபடி நடக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். தொழிற்சங்க பொறுப்புகளிலும், தொழிலாளர்களில் மீது அக்கறை கொள்வதிலும் அன்புடன் நடந்து கொள்வீர்கள். மருத்துவ உதவிகளையும், பிரச்சனைகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள்.
 
பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது உங்களின் தொழிலிலும் வேலை வாய்ப்பிலும் உதவி செய்வார். கூட்டு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருப்பது பணபுழக்கம் நன்றாக இருக்கும். சிறிய உதவி கேட்டு செல்லும் உங்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெளியூரிலும், வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகளை செய்வீர்கள். தங்க நகை வியாபாரிகள் நிகழ்ச்சிகளிலும், விற்பனை செய்யுமிடத்திலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அவபெயர் வர வாய்ப்பு உள்ளதால் யாரையும் நம்பாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் நேர்மையுடன்  நடந்து கொள்வீர்கள். கடும் போட்டியை கூட துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல்நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும் உங்களின் தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், வெண்மை, சிவப்பு,
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
19-09-2025 வெள்ளிக்கிழமை காலை 09.33 மணி முதல் 21-09-2025 ஞாயிறு மாலை 05.18 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய் கிழமைகளில் இலுப்பெண்ணெய் தீபம் முருகனுக்கு போட்டுவர இழந்ததை மீண்டும் பெரும் வாய்ப்பை பெறுவீர்கள்.